Skip to main content

பறிமுதல் செய்யப்பட்ட தமிழக விசைப்படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு!

Published on 08/11/2020 | Edited on 08/11/2020

 

srilanka court judgement tamilnadu fishermans boats

இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் 94 விசைப்படகுகளை அழிக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

கடந்த 2015- ஆம் ஆண்டு முதல் 2018- ஆம் ஆண்டு வரை எல்லை தாண்டி வந்ததாகக் கூறி தமிழக மீனவர்களின் 121 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தன. பறிமுதல் செய்ய்யப்பட்ட படகுகள் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டிருப்பதால் கடற்கரையில் மாசு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. மேலும், கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ள தமிழக படகுகளால் தங்களுக்கு இடையூறாக இருப்பதாக, அந்நாட்டு மீனவர்கள் கூறி வந்தனர்.

 

இது தொடர்பான வழக்கு இலங்கை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், 94 விசைப்படகுகளை அழிக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை நாட்டு நீதிமன்ற உத்தரவால் தமிழக மீனவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். படகுகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

நீதிமன்ற அழிக்க உத்தரவிட்டுள்ள 94 விசைப்படகுகளில் 88 விசைப்படகுகள் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களுக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்