Skip to main content

"அவங்கெல்லாம் நம்ப கண்ணுக்கு முதலமைச்சர் வேட்பாளராக தெரியமாட்டார்கள்"- சத்யராஜ்

Published on 03/05/2018 | Edited on 03/05/2018
sathyaraj

 

தென்னிந்திய திரையுலக பெண்கள் சங்கத்தின் தொடக்க விழாவில் நடிகர் சத்யராஜ் பேசியது, "மே தின நல்வாழ்த்துக்கள். பெண்களுக்கு வீட்டிலும் பிரச்சனை வெளியிலும் பிரச்சனை இருக்கிறது. முதலில் ஒரு முடிச்சை அவிழ்க்க வேண்டும் என்றால், அது எப்படி போடப்பட்டது என்று பார்க்க வேண்டும். சாஸ்திரம், பண்பாடு, கலாச்சாரம், நாகரிகம் இந்த அனைத்து பெயர்களாலும் பெண்கள் அடிமைப்படுத்தப்படுகின்றனர். இது அனைத்தும் கண்ணுக்கு தெரியாமல் இருக்கிறது. இதற்கு காவலாகத்தான் ஜாதி, மதம், கடவுள் என்கிற கற்பனை கருத்தியலையெல்லாம் வைத்திருக்கிறார்கள். இதிலிருந்து பெண்கள் விடுதலையாக வேண்டும் என்றால் பெண்கள் முதலில் படிக்க வேண்டிய புத்தகம் பெரியார் எழுதிய பெண் ஏன் அடிமையானால்? இதைத் தெரிந்துகொண்டால்தான் நாம் இதிலிருந்து வெளியே வர முடியும். பாலபாரதியை போன்று எல்லா அரசியல்வாதிகளும் இருந்துவிட்டால் எப்படி இருக்கும் நினைத்து பாருங்கள். அவங்கெல்லாம் நம்ப கண்ணுக்கு முதலமைச்சர் வேட்பாளராக  தெரியமாட்டார்கள்.

 

நமக்கு நல்லகண்ணு ஐயாவையே தெரியல. என்ன செய்றது அப்படி நாம் வளர்த்து வைத்திருக்கிறோம். மம்மூட்டி சார் சொன்னாரே நாங்க சிஎம்ம சினிமா திரையரங்குகளில் தேடுவதில்லை. சரி, வண்டி எங்கையோ போகுது. அண்ணல் அம்பேத்காருடைய வளர்ச்சியை பற்றி நான் இங்கு சொல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அவர் மிகவும் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்தவர். அதனால், அவர்களுக்காக போராட வேண்டும் என்று நினைத்தவர். நல்ல படிப்பை படித்தார், பொருளாதாரத்தில் சிறந்து விளங்கினார். அதன் பின்தான் போராடினார், பெயர் வாங்கினார். இங்கு இருப்பவர்களுக்கும் அதைத்தான் நான் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். கல்வியில், பொருளாதாரத்தில், பொது அறிவில் நன்கு வளர்த்துக்கொள்ளுங்கள் அதன் பின்பு போராடலாம். இந்த சங்கம் பெண்களின் எல்லா பிரச்சனைகளுக்கும் பக்கபலமாக இருக்க வேண்டும்". 

சார்ந்த செய்திகள்