Skip to main content

பட்டண பிரவேசத்திற்கான விழா கொடியேற்றத்துடன் துவக்கம்!

Published on 12/05/2022 | Edited on 12/05/2022

 

pattana piravesam festival start

 

தருமபுரம் ஆதீனத்தின் பட்டண பிரவேச நிகழ்வுக்கான திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

 

மனிதனை மனிதனே பல்லக்கில் தூக்கிச் செல்லும் தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேச நிகழ்வுக்கு தமிழக அரசு தடை விதித்திருந்த நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள், பல்வேறு ஆதீனங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதேபோல் ஆன்மீகம் ஆர்வலர்கள் பட்டண பிரவேச நிகழ்வை நடத்த அரசு அனுமதியளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர். அதனைத்தொடர்ந்து பட்டண பிரவேச நிகழ்வுக்கு விதித்திருந்த தடையை தமிழக அரசு நீக்கியது.

 

இந்நிலையில் இன்று தருமபுரம் ஆதீனத்தின் பட்டண பிரவேச நிகழ்வுக்கான திருவிழா இன்று ஆதீனகர்த்தர் முன்னிலையில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று முதல் 11 நாட்கள் நடைபெறும் விழாவில் இறுதி நாளான 11 நாள் (வரும் 22 ஆம் தேதி) தருமபுர ஆதினம் பல்லக்கில் வலம் வருவார். இந்த 11 நாள் விழாவில் முக்கிய நிகழ்வாக 18 ஆம் தேதி திருக்கல்யாண வைபவம், 20 ஆம் தேதி திருத்தேர் உற்சவம், 21 ஆம் தேதி காலை காவிரி தீர்த்தவாரியும், 22 ஆம் தேதி பட்டண பிரவேச நிகழ்வும் நடக்கவுள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்