Skip to main content

ஆன்லைன் வர்த்தகத்தை கண்டித்து வணிகர்கள் ஆர்ப்பாட்டம்!

Published on 18/12/2019 | Edited on 18/12/2019

இந்தியா முழுவதும் உள்ள வணிகர்கள் அமேசான், ஃப்ளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களை தடை செய்யக்கோரி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

onilne marketing Caravans amazon, flipkart dindigul district

அதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் வணிகர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள், அதுபோல்  திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பிரபாகரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பழனி, வடமதுரை, ஒட்டன்சத்திரம், அய்யலூர், கோவிலூர் உள்பட மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளைச் சேர்ந்த 300- க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

onilne marketing Caravans amazon, flipkart dindigul district


இதில் கலந்து கொண்ட வணிகர்கள், பிளிப்கார்ட் அமேசான், மண்டி உள்ளிட்ட அந்நிய நிறுவனங்களை தடை செய்ய வேண்டும். வணிகத்தில் அன்னிய முதலீட்டை ஒருபோதும் இந்தியாவில் அனுமதிக்கக்கூடாது. ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்து சிறு, குறு, நடுத்தர வணிகர்களை பாதுகாக்க வேண்டும் என கண்டன குரல்கள் எழுப்பினர்கள்.
 

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் மங்கலம் அழகு, பொருளாளர் கனி மற்றும் எம்பி வாட்ச் கடை உரிமையாளர் பிச்சைமாணிக்கம். சாகர் மெடிக்கல் உரிமையாளர் சாகர் மற்றும் வர்த்தக சங்கத் தலைவர் எஸ்.கே.சி. குப்புசாமி உள்பட சங்க பொறுப்பாளர் பலர் கலந்து கொண்டனர்.


 

சார்ந்த செய்திகள்