Skip to main content

கையசைத்த கலைஞர் - உற்சாகமடைந்த தொண்டர்கள் (படங்கள்)

Published on 03/06/2018 | Edited on 03/06/2018

 

தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கலைஞரின் 95வது பிறந்தநாளை இன்று திமுக தொண்டர்கள் தமிழகம் முழுவதும் கொண்டாடினர். அவரது இல்லம் அமைந்துள்ள கோபாலபுரத்தில் தொண்டர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவிக்க குவிந்தனர். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக முன்னணித் தலைவர்கள் கோபாலபுரத்தில் குவிந்தனர்.
 

காலையில் இருந்தே தொண்டர்கள் கலைஞரை சந்திக்க காத்திருந்தனர். காலை 11.50 மணி அளவில் வீட்டுக் வெளியே காத்திருந்த தொண்டர்களை சந்திக்க கலைஞர் வந்தார். கலைஞரை பார்த்ததும் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். கலைஞரை வாழ்த்தி முழக்கங்களை எழுப்பினர். அப்போது தொண்டர்களை பார்த்து கலைஞர் கை அசைத்தார்.
 

சார்ந்த செய்திகள்