Skip to main content

தியேட்டரில் விசிலடிப்பதை போல... ஜெ. பேசிய ஆடியோ வெளியீடு

Published on 26/05/2018 | Edited on 26/05/2018
jayalalitha - sivakumar 600.jpg


அப்போலோ மருத்துவமனையில் 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ம் தேதி பதிவு செய்யப்பட்ட, 52 வினாடிகள் கொண்ட ஆடியோ ஒன்றை ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் மருத்துவர் சிவக்குமார் 26.05.2018 சனிக்கிழமை தாக்கல் செய்தார். ஜெயலலிதா இந்த ஆடியோவில் ஆங்கிலம் மற்றும் தமிழ் கலந்து தான் பேசுகிறார். இருமல் அதிகமாக இருப்பதால் இருமிக்கொண்டே பேசுகிறார். 
 

அந்த ஆடியோவில் வரும் உரையாடல்கள் :-   

                             
ஜெயலலிதா : தியேட்டரில் முதல் வரிசையில் விசிலடிப்பதை போல மூச்சு திணறுகிறது. எனக்கு ரத்த அழுத்தம் எவ்வளவு இருக்கிறது?
 

மருத்துவர் : ரத்த அழுத்தம் 140/80-ஆக உள்ளது.
 

ஜெயலலிதா : அது எனக்கு நார்மல் தான். 
 

ஜெயலலிதா : எதுல ரெக்கார்ட் பண்றிங்க    
                      

ஜெயலலிதா : ஆடியோ பதிவு செய்வது சரியாக கேட்கிறதா ? 
 

மருத்துவர் : சிறப்பாக இல்லை

  
மருத்துவர் : சிறப்பாக இல்லை, வி.எல்.சி அப்ளிகேஷன் டவுன்லோட் செய்கிறேன்.
 

ஜெயலலிதா : எடுக்க முடியவில்லை என்றால் விட்டு விடுங்கள். இதற்காக தான் நான் அப்போவே கூப்பிட்டேன்.  எடுக்க முடியாது என கூறிவிட்டீற்கள். ஒன்னு கெடக்க ஒன்னு செய்கிறீர்கள்.    
                                                                                                             
இவ்வாறு அந்த ஆடியோவில் பதிவாகியுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்