Skip to main content

கனமழையால் நாசமான வாழை... விவசாயம் செய்த தாய் மகன் தற்கொலை!

Published on 21/11/2020 | Edited on 21/11/2020

 

asas

 


திருவானைக்கோவில் கணபதி நகர்ப் பகுதியில் வசித்து வந்தவர் செல்லம்மாள் (65). இவருடைய மகன் ரமேஷ் பாபு (45). இருவரும் விவசாயம் செய்து வந்தனர்.

 

கொண்டயம் பேட்டைப் பகுதியில் குத்தகைக்கு 3 ஏக்கர் நிலம் வாங்கி நெல், வாழை எனப் பயிரிட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையால், பயிரிட்ட வாழை முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. இதனால் மனமுடைந்த தாய், மகன் இருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர். தகவலறிந்த ஸ்ரீரங்கம் போலீசார், வழக்குப் பதிவு செய்து, உடல்களைப் பிரேதப் பரிசோதனைகாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்