Skip to main content

கரோனா பரவலைத் தடுக்கத் தவறிய சென்னை மாநகராட்சியைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்!

Published on 03/06/2020 | Edited on 03/06/2020

 

cpim


சென்னையில் கரோனா சமூகப் பரவலைத் தடுக்கத் தவறிய சென்னை மாநகராட்சி மற்றும் தமிழக அரசைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் சென்னை பேசின் பிரிட்ஜ் பகுதியில் உள்ள மாநகராட்சி வடக்கு வட்டாரத் துணை ஆணையர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 


மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க தேசிய துணைத் தலைவருமான வாசுகி கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், கரோனா பரிசோதனையைத் தீவிரப்படுத்த வேண்டும், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் மாதம் 7,500 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும், அமைப்புச் சாரா தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த வாசுகி, மாநில அரசு கோரிய நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும், மாவட்ட வாரியாகப் புள்ளிவிவரங்களை வெளியிட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்