Skip to main content

ஸ்டெர்லைட் ஆலை மூடலால் மின்மாற்றிகளுக்கு காப்பர் கிடைக்கவில்லை: அமைச்சர் கவலை!

Published on 08/06/2018 | Edited on 08/06/2018


ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் மின்மாற்றிகளுக்கான காப்பர் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கவலை தெரிவித்துள்ளார்.

திருவெற்றியூர் தொகுதியில் பறவை அமர்ந்தால் கூட மின்மாற்றி பழுதாகிறது என்றும் அதனை மாற்றி அமைக்க வேண்டும் என சட்டப்பேரவையில் கே.பி.பி.சாமி கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, தமிழகத்திற்கு தேவையான மின்மாற்றிகளை அமைக்க ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து காப்பர் பெறப்பட்டு வந்தது. தற்போது ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டிருப்பதால் மின்மாற்றிக்கு தேவையான காப்பர் பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால் மாற்று இடத்தில் இருந்து காப்பர் வாங்கி, மின்மாற்றிகள் அமைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. விரைவில் தேவையான இடங்களில் மின்மாற்றிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்தார்.

சார்ந்த செய்திகள்