Skip to main content

திருமுருகன் காந்தி கேட்ட உதவி... உடனடியாக உதவிய திமுக எம்.பி! 

Published on 06/05/2020 | Edited on 06/05/2020

 

dmk

 


இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கை மே 17 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் மத்திய அரசு அறிவித்த ஊரடங்கில் சில தளர்வுகள் மே 4 ஆம் தேதி அமலுக்கு வந்தது. இருப்பினும் கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள், மால்கள், திரையரங்குகள், பொழுதுபோக்கு பூங்காக்கள், சலூன் கடைகள் திறக்க அனுமதியில்லை என்று அரசு அறிவித்துள்ளது. 


இந்த நிலையில் மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ஈழ தமிழர்களுக்கு உதவி கேட்டு இருந்தார். அதில், தர்மபுரி பாப்பிரெட்டிப்பட்டி வட்டம்,வெங்கடசமுத்திரம் 4வழி சாலையிலிருந்து 3 கி.மீ-இல் இருக்கும் முல்லிகாடு,வாணியாறு அணை பகுதிகளில் வசிக்கும் 220 ஈழஅகதி குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்றும், தமிழக அரசே உடனடியாக உதவு! வாய்ப்புள்ளவர்கள் உதவி செய்ய வாருங்கள் என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு தருமபுரி திமுக எம்.பி டாக்டர். செந்தில்குமார் பதிலளித்துள்ளார். அதில், மதிப்புக்குரிய தோழர் திருமுருகன், நீங்கள் உதவி கேட்ட 220 ஈழ தமிழர் குடும்பத்தினருக்கு அரிசி,மளிகை பொருட்கள் முல்லிகாடு,வாணியாரு அணை பகுதியில் இன்று காலை 8 மணிக்கு வழங்கபட்டது. திமுக ஒரு சராசரி கட்சி அல்ல. இது மக்களுக்கான மாபெரும் இயக்கம் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்