Skip to main content

தாமஸ் கோப்பை பேட்மிண்டன்- வரலாறு படைத்தது இந்தியா

Published on 15/05/2022 | Edited on 15/05/2022

 

Thomas Cup Badminton - India makes history!

 

தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் இந்திய அணி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. 

 

தாய்லாந்தில் நடைபெற்ற தாமஸ் கோப்பை பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் இந்தோனேசியா அணியை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது. 14 முறை சாம்பியனான இந்தோனேசியா அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. தாமஸ் கோப்பையின் 73 ஆண்டு கால வரலாற்றில் இந்திய அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது. 

 

இந்திய அணியின் லக்ஷயா சென் முதல் போட்டியிலும், இரண்டாவது போட்டியில் சாத்விக்- சிராக் இணையும் வெற்றி பெற்றனர். மூன்றாவது போட்டியில் கிடாம்பி ஸ்ரீகாந்த் வெற்றி பெற்ற நிலையில், இந்திய அணி தாமஸ் கோப்பையை வென்று சரித்திரம் படைத்துள்ளது. 

 

தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூபாய் 1 கோடி பரிசுத் தொகையை அறிவித்தது மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம். 

 

 

சார்ந்த செய்திகள்