Skip to main content

'ஓமிக்ரான்' கரோனா கட்டுப்பாடுகள் அறிவிப்பு!  

Published on 28/11/2021 | Edited on 28/11/2021

 

 'Omigron' Corona Restrictions Announcement!

 

தென்னாப்பிரிக்கா நாட்டில் 50க்கும் மேற்பட்ட மரபணு பிறழ்வுகளுடன் பி.1.1.529 என்ற புதிய கரோனா திரிபு கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸின் ஸ்பைக் ப்ரோட்டினில் பல பிறழ்வுகள் இருப்பதால், இது வேகமாகப் பரவலாம் என்றும், தடுப்பூசிகள் அளிக்கும் நோயெதிர்ப்பு சக்தியை ஊடுருவலாம் என்றும் அஞ்சப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம், இந்தப் புதிய வகை கரோனாவைக் கவலைக்குரியது என வகைப்படுத்தியுள்ளதுடன், இந்தப் புதிய வகை கரோனாவிற்கு 'ஓமிக்ரான்' கரோனா’ எனப் பெயரிட்டுள்ளது.

 

இந்நிலையில் இந்தியாவில் 'ஓமிக்ரான்' கரோனா கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒமைக்ரான் கரோனா பரவல் எதிரொலியாக 12 நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்கா, பிரிட்டன், பிரேசில், வங்கதேசம், போட்ஸ்வானா, சீன நாட்டு பயணிகளுக்கும், அதேபோல் மொரீஷியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர் உள்ளிட்ட 12 நாட்டு பயணிகளுக்கும் கட்டுப்பாடு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த 12 நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு கரோனா சான்றிதழ் கட்டாயம் என பொதுசுகாதாரத்துறை அறிவித்துள்ளது. நெகடிவ் வந்தாலும் மீண்டும் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படும். இல்லை எனில் 7 நாட்கள் தனிமைப்படுத்துதல் செய்யப்பட்டு மீண்டும் பரிசோதனை செய்யப்படும். பரிசோதனை நெகட்டிவ் என்று வந்தால் தனிமைப்படுத்துதல் இல்லை. பரிசோதனையில் 'ஓமிக்ரான்' கரோனா இல்லை எனக் கண்டறியப்பட்டால் டிஸ்சார்ஜ் செய்யப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்