Skip to main content

சபரிமலை விவகாரம் தொடர்பாக புதுச்சேரியில் முழு அடைப்பு நடத்தினால் கடும் நடவடிக்கை - நாராயணசாமி எச்சரிக்கை! 

Published on 25/11/2018 | Edited on 25/11/2018
n

 

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இன்று தனது இல்லத்தில் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார்.     

அப்போது அவர் கூறியதாவது:  ‘’காரைக்காலில் கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்பு குறித்து இடைக்கால அறிக்கையை மத்திய உள்துறை செயலாளர் மற்றும் நிதித்துறை அமைச்சரிடம் அளிக்கக்கப்படுள்ளது. அதனை தொடர்ந்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட காரைக்கால் மாவட்டத்தை வரும் 26-ந் தேதி மத்தியக்குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர்.   ஆய்வுக்கு பின்னர் மத்திய குழுவினர் என்னை (நாராயணசாமி) சந்தித்து ஆலோசிக்க நேரம் கேட்டுள்ளனர். 

 

சபரிமலை விவகாரம் கேரள மாநில பிரச்சினை, அதை புதுச்சேரியில் உள்ள பா.ஜ.கவினர் கையில் எடுத்துக்கொண்டு வரும் 26-ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்துவது ஏற்புடையது அல்ல.  பா.ஜ.க பந்த் போராட்டத்தினை உடனடியாக கைவிட வேண்டும், போராட்டம் நடத்தினால்,  சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் பாஜகவினர் நடந்து கொண்டால் அவர்கள் மீது  சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.   பாஜக விடுத்துள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு பொதுமக்கள் யாரும் ஆதரவு தர வேண்டாம்.’’

 

சார்ந்த செய்திகள்