Skip to main content

சமையல் பாத்திரம் போதும்; படகு எதற்கு..? - கேரளாவில் கெத்து காட்டிய மணமக்கள்!

Published on 18/10/2021 | Edited on 18/10/2021

 

kjl

 

லட்சத்தீவு அருகே அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியில், கேரளாவில் கடந்த சில நாட்களாகக் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், கோட்டயம் மற்றும் இடுக்கி மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

 

இந்த வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கேரளாவில் இன்று திருமணம் செய்ய இருந்த ஒரு ஜோடி, சாலை முழுவதும் தண்ணீர் தேங்கி இருந்ததால் மண்டபம் செல்ல முடியாமல் தவித்துள்ளனர். காரில் செல்வது சாத்தியமில்லை, நடந்து செல்வதும் முடியாத நிலையில் என்ன செய்வது என்று யோசித்த அந்த ஜோடி முடிவில் கல்யாணத்துக்குச் சமையல் செய்ய வாங்கப்பட்ட பாத்திரத்தில் ஏறி அமர்ந்து தண்ணீரில் மிதந்தபடியே திருமணம் செய்துகொள்ள மண்டபத்துக்குக் கிளம்பினர்.

 

இந்த சம்பவத்தை அருகில் இருந்த ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்த நிலையில் தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. 


 

சார்ந்த செய்திகள்