/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vajpayee_8.jpg)
முன்னாள் பிரதமர் அட்டல் பிஹாரி வாஜ்பாய் உடல்நிலை சரியில்லாமல் ஆகஸ்ட் 16ஆம் தேதி காலமானார்.
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரியோ நகரத்தின் 200 வருட பழமைவாய்ந்த ராயல் அருங்காட்சியம் செப்டம்பர் 2ஆம் தேதி தீக்கிரையானது.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி பிஹாரிலுள்ளஒரு மருத்துவமனையில் 11 வயது சிறுவன்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுஉயிரிழந்துவிட்டார். அவரின் உடலை எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் கொடுக்காததை அடுத்து இறந்த மகனின் உடலை தோளில் சுமந்தபடி வீட்டுக்கு கொண்டு வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உலகின் மிகவும் வயதான மோபி டால்பின் தன்னுடைய 58வது வயதில் காலமானது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ranjan gogoi_0.jpg)
சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதி தந்ததையடுத்து, பம்பை நிலக்கல் போன்ற பகுதிகள் போராட்டக்களமாக மாறியது.​​​
கடந்த அக்டோபர் 9ஆம் தேதிஆளுநர் மாளிகையின் புகாரின் பேரில் சென்னை விமான நிலையத்தில் நக்கீரன் ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
பாரம்பரிய நெல் விதைகளை மீட்டு எடுத்த நெல் ஜெயராமன், கடந்த நவம்பர் மாதம் புற்றுநோய் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரு மாத சிகிச்சையை அடுத்து டிசம்பர் 6ஆம் தேதி காலமானார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/amal hussein.jpg)
ஏமனில் மனிதாபிமானம் அழிந்துவிட்டது என்பதை அடையாளப்படுத்தும் விதமாகஅமல் ஹுசைன் என்கிற 7 வயது சிறுமியின் புகைப்படம் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அச்சிறுமி நவம்பர் 1ஆம் தேதி காலமானார்.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
பல சூப்பர் ஹீரோக்களின் வடிவங்களை உருவாக்கிய மார்வெல் காமிக்ஸ் நாயகன் ஸ்டான் லீ (95) உடல்நலக்குறைவால் கடந்த நவம்பர் 12ஆம் தேதி மறைந்தார்.
கடந்த நவம்பர் மாதத்தில் தமிழக டெல்டா பகுதிகளில் கஜா புயல் கோரத்தாண்டவம் ஆடியது. இந்த புயாலால் பல விவசாயிகள் வீடுகள் இன்றி முகாமுக்கு தள்ளப்பட்டனர். சில கிராமங்களில் இன்றுவரை மின் வசதி வரவில்லை.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள சூடைக் காந்த பள்ளி எனும் கிராமத்தைச் சேர்ந்த சுவாதியும், இளைஞர் நந்தீஸ் என்பவரும் பல எதிர்ப்புகளை மீறி சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டனர். திருப்பூரில் தங்களது வாழ்க்கையை நடத்திவந்த இருவரும் 13.11.2018 அன்று கர்நாடகா, மாண்டியா பகுதியில் பிணமாக கண்டெடுக்கப்பட்டனர். உடற்கூராய்வில் இருவரும் அடித்துக் கொல்லப்பட்டிருப்பதும், சுவாதி மூன்றுமாதக் கர்ப்பிணி என்பதும் தெரியவந்தது. இதுபோல் இன்னும் சில ஆணவக்கொலைகள் நடந்ததும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த நவம்பர் 26ஆம் தேதி எழுத்தியல் அறிஞர், தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் காலமானார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/gaja-cyclone_0.jpg)
கஜா புயல் பாதிப்பை உணர்ந்து பல மக்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ கை கொடுத்தார்கள். ஆனால், இக்கட்டான நிலையிலும் பாதிக்கப்பட்ட ஊர்களை சேர்ந்த சில வியாபாரிகள் 1 லிட்டர் பெட்ரோல் ரூ.200க்கும், 1 மெழுகுவர்த்தி ரூ.20க்கும் விற்றஅநியாயங்களும் நடந்தது.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
தயாரிப்பாளர் சங்க தலைவராக இருக்கும் விஷால் 7கோடிக்கு முறைகேடு செய்துவிட்டார் என்று விஷாலின் எதிரணி தியாகராய நகரிலுள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு பூட்டு போட்டனர். இதனை தொடர்ந்து அடுத்த நாள் அந்த பூட்டை உடைக்க வந்த விஷாலுக்கும் காவல் துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் விஷால் கைது செய்யப்பட்டார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/prabanjan.jpg)
வானம் வசப்படும், மானுடம் வெல்லும் போன்ற தமிழ் நாவல்களை எழுதிய எழுத்தாளர் பிரபஞ்சன் கடந்த டிசம்பர் 21ஆம் தேதி உடல்நல குறைவால் காலமானார்.
ராயபுரம் ஐந்து ரூபாய் டாக்டர் ஜெயச்சந்திரன், கடந்த டிசம்பர் 22ஆம் தேதி காலமானார். அவரது மறைவிற்கு பிரதமர் முதல் பலர் தங்களது அஞ்சலியை தெரிவித்தனர்.
எழுத்தாளரும் தமிழ் அறிஞருமான க.ப.அறவாணன் உடல்நலக்குறைவால் கடந்த டிசம்பர் 23ஆம் தேதி சென்னையில் காலமானார்.
தெலுங்கானாவை சேர்ந்த பெண் அனுராதா என்பவர் பெற்றோரை எதிர்த்து கலப்பு திருமணம் செய்துகொண்டார். அதனால் கோபமடைந்த அனுராதாவின் பெற்றோர், அவரை வீட்டிற்கு கடத்தி வந்து தீக்கிரையாக்கி அந்த சாம்பலை நதியில் கலந்தனர். பின்னர், அந்த பெற்றோர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். இது மட்டும் இந்த வருடத்தில் நடந்த ஆணவக்கொலை அல்ல, தெலுங்கானாவிலேயே மூன்று பயங்கரமான ஆணவக்கொலைகள்இந்த வருடத்தில் நடந்திருக்கிறது.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
மருத்துவ ஊழியர்களின் கவனக்குறைவினால் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ஹெச்ஐவி வைரஸ் பாதித்த இரத்தத்தை ஏற்றினர். இதனால் அப்பெண்ணுக்கு ஹெச் ஐ வி தொற்று ஏற்பட்டது. இதை எதிர்த்து அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போதுதான் அதேபோல் எங்களுக்கும் நடந்துள்ளது என மெலும் சில பெண்கள் புகார் அளித்தனர். இது தமிழகத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
முந்தைய பகுதி:
காவிரி தண்ணீர் என்றால் கண்டிப்பாக கிடைக்காது... கண்ணத்தை தொட்ட கவர்னர்... - ஷாக்ஸ் 2018 பகுதி 1
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/18057647_719886548191985_4542912737982370865_n.jpg)