2017 வருடம் நவம்பர் மாதம் ஹைதரபாத்தில் இவான்கா ட்ரம்ப் வருகையையொட்டி பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. அது இந்த வருட ஜனவரி,ஃபிப்ரவரி ஆகிய மாதங்களும் நீடித்து, மேலும் பிச்சை எடுப்பவர்களை குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.500 வெகுமதி என்று நடவடிக்கை மேற்கொண்டது காவல்துறை.
காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும் என்று பலர் குரல் கொடுத்தபோது சுப்பிரமணிய சாமி, தமிழக மக்களுக்கு தண்ணீர் வேண்டுமா? அல்லது காவிரி தண்ணீர் வேண்டுமா? என்பதை முடிவு செய்ய வேண்டும். தண்ணீர் வேண்டும் என்றால் கடலில் இருந்து உற்பத்தி செய்யலாம். காவிரி தண்ணீர் என்றால் கண்டிப்பாக கிடைக்காது என்று செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.
கடந்த பிப்ரவரி மாதத்தில் பஞ்சாப்பை சேர்ந்த அசுரன்பால் என்பவர் முள்ளங்கியைத் திருடியதாகக் கூறி ஐந்து தலித் சிறுவர்களை நிர்வாணப்படுத்தி, ஊர்வலமாகக் கூட்டிச்சென்றார். இது பலரால் வீடியோவாக படம் பிடிக்கப்பட்டது. பின்னர், அந்த சிறுவர்களின் பெற்றோர்கள் அசுரன்பால் மீது காவல்துறையில் புகார் தெரிவித்தனர். இதனை அடுத்து அவர் கைதும் செய்யப்பட்டார், இந்த சம்பவத்திற்கு சான்றாக சிறுவர்கள் நிர்வாணப்படுத்தி, ஊர்வலமாகக் கூட்டிச்சென்ற வீடியோவே கொடுத்தனர்.
கடந்த மார்ச் மாதத்தில் கமல்ஹாசனின் கட்சியான மக்கள் நீதி மய்யத்திற்கு உறுப்பினர்கள் இணையதளத்தின் மூலம் டிஜிட்டல் முறையில் சேர்க்கப்பட்டனர். அப்போது, பாஜக மாநில தலைவர் தமிழிசை, எனக்கு உறுப்பினர்களாக சேர்ந்துகொள்ளுங்கள் என்று மெயில் வந்ததாக கூறி ஷாக் கொடுத்தார். அதற்கு பதிலடி தரும் விதத்தில், மக்கள் நீதி மய்யம் ட்விட்டர் பக்கத்தில் தமிழிசைதான் உறுப்பினராக சேர விருப்பம் தெரிவித்திருந்தார் என்று பதிலுக்கு ஷாக் வந்தது.
உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் கடந்த மார்ச் 14ஆம் தேதி மறைந்தார்.
மகாராஷ்டிரா அரசின் தலைமை செயலகம் மந்திராலயாவின் தேநீர் செலவு பற்றிய கேள்விக்கு மூன்று ஆண்டுகளுக்கு 3 கொடியே 40 லட்சம் என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கிடைத்தது பதில். தினமும் சராசரியாக 18,500 கோப்பை தேநீர் விநியோகிக்கப்பட்டுள்ளதா? அது சாத்தியமா? என பல கேள்விகள் எழுப்பியிருந்தார் காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம்.
தமிழகத்தில் ஒருநாளைக்கு 1 கோடி ரூபாய் ‘முட்டை’ ஊழல் தமிழக அரசை விசாரிக்க ஆணையம் கடந்த மார்ச் மாதம் அதிரடி உத்தரவிடப்பட்டது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள டிம்பி கிராமத்தில் தலித் இளைஞர் ஒருவர் குதிரை வைத்திருக்கிறார் என்பதால் ஆதிக்க சாதியினரால் கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது.
நிர்மலா தேவி விவகாரம் குறித்து தமிழக ஆளுநர் ராஜ்பவனில் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றை கடந்த ஏப்ரல் மாதம் வைத்தார். அப்போது அந்த செய்தியாளர்கள் சந்திப்பின் முடிவில் பெண் பத்திரிகையாளர்கள் கண்ணத்தை தட்டினார். அது மிகப்பெரும் சர்ச்சையாகி பலர் ஆளுநரை விமர்சித்தனர்.
“இன்டர்நெட் வசதியுள்ள செல்போன்களைப் பயன்படுத்தும் இளம்பெண்கள், ஆண்களிடம் காதல் வயப்பட்டு அவர்களை காதல் திருமணம் செய்துகொள்கின்றனர். நாகரீகமான உடை அணியும் பெண்களால் ஆண்கள் கவரப்படுகின்றனர். இதனால், தேவையற்ற பிரச்சனைகள் உருவாகின்றன” என்று சொல்லி ஹரியானா மாநிலத்திலுள்ள ஷாபூர்கெரி கிராமத்தின் ஊராட்சித்தலைவரான பிரேம்சிங் இளம்பெண்கள் மொபைல் போன் பயன்படுத்தவும், ஜீன்ஸ் அணியவும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் குஜராத் மாநில சட்டமன்ற சபாநாயகர் ராஜேந்திர திரிவேதி, சட்டமேதை அம்பேத்கரை பிராமணர் என அழைத்தது சர்ச்சையைக் கிளப்பினார்.
தந்தை குடிப்பழக்கத்தை நிறுத்தாததால், எனக்கு கொள்ளி வைக்காதே. பாரத பிரதமரே மதுபான கடைகளை மூடு, இல்லையெனில் நான் ஆவியாக வந்து குடிப்பவர்கலை பயம் முறுத்துவேன் என்று மரண சாசனம் எழுதி வைத்துவிட்டு நெல்லையை சேர்ந்த தினேஷ் குமார் என்ற பள்ளி மாணவன் பாலத்தில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடந்த மே மாதத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
தாஜ்மஹாலின் நிறம் மாறிகொண்டே வருகிறது என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்டது. அந்த வழக்கு விசாரணையின்போது பதிலளித்த தொல்லியல் துறை, நிற மாற்றத்திற்கு காரணம் துவைக்காத சாக்ஸுகளும், பாசிகளும்தான் காரணம் என்றனர். தொல்லியல் துறையின் இதுபோன்ற பதிலை அப்போது பலரும் கேலி செய்தனர்.
பெண் பத்திரிகையாளர்களை இழிவாக பேசிய புகாரில் எஸ்.வி. சேகர் போலிஸாரால் தேடப்பட்டு வந்தார். ஆனால், இன்னொரு பக்கம் போலிஸ் பாதுகாப்புடனே அவர் திருமணம், நண்பர்கள் பிறந்தநாள் என ஃபங்ஷன்களை அட்டண்ட் செய்து வந்தார்.
ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் பெரிய ஷாக்காக அமைந்தது.
ஸ்டெர்லைட் போராட்டத்தை அடுத்து பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திப்பதற்காக தூத்துக்குடிக்கு சென்றார். அங்கு சென்றபின் காயமடைந்தவர்களின் நலன் விசாரித்துகொண்டிருந்தார். அப்போது ஒரு இளைஞர் ரஜினியை பார்த்து, நீங்கள் யார் என்று கேட்க, அதற்கு ரஜினி ‘நான்தான்பா ரஜினி காந்த்’என்றார். உடனடியாக அந்த டயலாக்கும் டிவிட்டரில் ட்ரெண்டானது.
கடந்த ஜூலை மாதம் கேரளாவில் பிரான்கோ என்னும் பேராயர் கன்னியாஸ்திரி ஒருவரை 13 முறை பாலியல் வன்புணர்வு செய்த புகாருக்காக கைது செய்யப்பட்டார். பின்னர், அவரின் பேராயர் பதவி வாடிகன் போப்பால் பறிக்கப்பட்டது.
சிறுமி ஹாசினி கொலை வழக்கில் குற்றவாளியான தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. இதனை அடுத்து தஷ்வந்த் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற இந்த மேல்முறையீட்டை விசாரித்த நீதிபதி, தூக்கு தண்டனையை உறுதி செய்து மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தார்.
திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஆகஸ்ட் 7ஆம் தேதி மறைந்தார். இதனை அடுத்து கலைஞரின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய கேட்கப்பட்டது. ஆனால், இதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்தது. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இரவோடு இரவாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்டு, கலைஞரின் உடலை மெரினாவில் அடக்கம் செய்யலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
அடுத்த பகுதி: