Skip to main content

“இதை காப்பாற்றுவது மக்கள் கையில்தான் இருக்கு” - நடிகர் ராதாரவி

Published on 22/08/2022 | Edited on 22/08/2022

 

radharavi talk about tittle movie

 

 

விஜித் நடிப்பில் டில்லிபாபு தயாரிப்பில்  உருவாகியுள்ள படம் டைட்டில். இயக்குநர் ரகோத் விஜய் இப்படத்தை இயக்க ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து விரைவில் வெளியாகவுள்ளது. இதனையொட்டி இப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. 

 

இவ்விழாவில் பேசிய ராதாரவி, "ஒரு படம் என்றால் அந்த படத்தில் பணியாற்றிய அனைவரும் அந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும். படம் நல்லா ஓடவில்லை என்றால் நடிகர்கள் சம்பளத்தை ஏற்றி விட்டார்கள் என்று சொல்கிறார்கள். அவர்கள் தங்களது சம்பளத்தை ஏற்ற வில்லை, அவர்களுக்கு சம்பத்தை ஏற்றி கொடுக்குறாங்க, அதனால வாங்குறாங்க. 

 

ஒரு படத்தை காப்பாத்தணும்னா அது தமிழ்நாட்டு மக்கள் கையில் தான் இருக்கு. எல்லோரும் ஓடிடியில் படத்தை பார்க்காமல், திரையரங்கம் சென்று பார்க்க வேண்டும்.  இதில் சிலர் சொல்றாங்க திரையரங்கில் பாப்கார்ன் விலை அதிகமாக இருக்குன்னு. உங்கள யார் வாங்க சொன்னா, திரையரங்கு உரிமையாளர் சொன்னாரா வாங்க சொல்லி, திரையரங்கம் போனா படம் பார்த்து விட்டு வரணுமே தவிர, பாப்கார்ன், ஸ்நாக்ஸ் போன்றவற்றை சாப்பிட கூடாது. எல்லாரும் சொல்றாங்க திருச்சிற்றம்பலம் நல்லா ஓடுதுன்னு. அது சன் டிவி வாங்கிருக்காங்க நல்லா ஓடுது. அண்மையில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படமும் நல்லா ஓடி பெரும் வெற்றி பெற்றது. இப்போதுள்ள இளம் ஹீரோக்களுக்கு மத்தியில் நின்னான்ல. அதான் கமல். அவன் நடிகன். ஒரு பெரிய பெயர் போன தயாரிப்பு நிறுவனம் நினைத்தால் வெற்றி படம் எடுக்க முடியும் என்பதனை தாண்டி தமிழன் படம் எடுத்தால் வெற்றி பெற வேண்டும் என்பதே நம் லட்சியமாக இருக்க வேண்டும். அதே போல இந்த படத்தை தமிழர்கள் வெற்றி பெற செய்ய வேண்டும்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்