Skip to main content

ஜெயக்குமார் மரண வழக்கு; வெளியான கொடூர புகைப்படங்கள்

Published on 07/05/2024 | Edited on 07/05/2024
Jayakumar death case; Horrific photos released

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் தனசிங் (வயது 60). நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவரான ஜெயக்குமாரை தீவிரமாக தேடி வந்தனர். இத்தகைய சூழலில் ஜெயக்குமார் கரைச்சுத்து புதூரில் உள்ள வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் உடல் பாதி எரிந்த நிலையில் 04.05.2024 அன்று சடலமாக மீட்கப்பட்டார். ஜெயக்குமார் தனசிங் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து ஜெயக்குமார் தனசிங் தனது மருமகனுக்கு கைப்பட கடந்த 27 ஆம் தேதி எழுதிய கடிதம் ஒன்றும் மற்றொரு கடிதம் என இரு கடிதங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மருமகனுக்கு எழுதிய அந்தக் கடிதத்தில் ‘அன்புள்ள மருமகனுக்கு’ எனக் குறிப்பிட்டு, “நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியனிடம் ரூ.5 லட்சம் கொடுத்துவிட்டு. அதற்கு ஈடாக கொடுக்கப்பட்ட காசோலையைத் திரும்பப் பெற வேண்டும். இடிந்தக்கரையை சேர்ந்தவருக்கு ரூ.10 லட்சம் திரும்ப கொடுக்க வேண்டும். தனது பிரச்சனையை மனதில் வைத்து கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களை யாரும் பழிவாங்க வேண்டாம். சட்டம் தன் கடமையைச் செய்யும்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

அவருடைய மரணம் தொடர்பான இந்த வழக்கில் 30 பேருக்கு காவல்துறை சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் மர்மமான முறையில் மரணமடைந்த நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் புதிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. எரிந்த நிலையில் ஜெயக்குமாரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஜெயக்குமார் உடலில் முகம், கழுத்து, கை, கால்களில் இரும்பு கம்பி கட்டப்பட்டிருந்தது. கை கால்களை கட்டி கொலை செய்துவிட்டு காரில் அவர் கொண்டுவரப்பட்ட வீசப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வெளியிட முடியாத அளவிற்கு கொடூர புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்