Skip to main content

திரிபுராவை ஏமாற்றிய பாஜக! - போராட்டத்தில் குதித்த திரிபுரா மக்கள் முன்னணி!!

Published on 05/04/2018 | Edited on 05/04/2018

திரிபுரா மாநிலத்தில் 25 ஆண்டுகளாக நீடித்து வந்த மாணிக் சர்க்கார் தலைமையிலான அரசு, நடந்து முடிந்த சட்டமன்றத்தேர்தலில் பா.ஜ.க.விடம் தோல்வியைத் தழுவியது. 

 

Tripura

 

பா.ஜ.க.வின் இந்த வெற்றிக்கு, வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியான திரிபுரா மக்கள் முன்னணி, பா.ஜ.க.வுக்கு ஆதரவளித்ததே காரணம் என திரிபுரா மாநில பா.ஜ.க. பொறுப்பாளர் ஹிமந்த் பிஸ்வா தெரிவித்திருந்தார். ஆனால், திரிபுரா மக்கள் முன்னணி எப்படி பா.ஜ.க.வுக்கு ஆதரவளித்தது என்பது புரியாத புதிராக இருந்தநிலையில், தற்போது அதற்கான காரணம் வெளியாகியுள்ளது.

 

தேர்தலுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் திரிபுரா மக்கள் முன்னணியின் தலைவர் என்.சி.டெபர்பாமாவை ரகசியமாக சந்தித்து பேசியுள்ளார். அந்த சந்திப்பின்போது, திரிபுரா மாநிலத்தில் பழங்குடி மக்கள் வாழும் 8 மாவட்டங்களில் உள்ள 7 ஆயிரம் கிலோமீட்டர் பகுதியை தன்னாட்சி பகுதியாக அறிவிக்கக் குழு ஒன்றை அமைப்போம். அந்தக் குழு அளிக்கும் பரிந்துரையின் பேரில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 6ல் மாற்றம் ஏற்படுத்துவோம் என வாக்குறுதி அளித்ததாக தகவல் தெரிவிக்கிறது. 

 

தற்போது, திரிபுரா மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்து ஒரு மாதம் ஆகியும், தாங்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்த வழியில்லை என்றும் கூறி கைவிரித்துள்ளது மத்திய அரசு. இதனால், ஆத்திரமடைந்த திரிபுரா மக்கள் முன்னணியின் இளைஞர் அமைப்பு கடந்த மார்ச் 30ஆம் தேதியில் இருந்து காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்