Skip to main content

ஊழல் புகார்கள்! மாற்றப்படும் மாவட்ட ஆட்சியர்கள்!

Published on 30/05/2020 | Edited on 30/05/2020
tamil nadu assembly

                           
 

ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டது போல தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் இடமாற்றம் குறித்த கோப்புகளும் கோட்டையில் தயாராகிறது. இந்த பட்டியலில், மாவட்ட கலெக்டர்கள் பலரின் தலை உருளவிருக்கிறது என்கிறார்கள். 
                         

கரோனா தாக்கத்தால் அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கத்தை பயன்படுத்தி, மாவட்ட கலெக்டர்கள் பலரும் பல ஊழல்களை செய்து வருவதாக சமீபத்தில் முதல்வர் எடப்பாடிக்கு புகார்கள் பறந்துள்ளது. இதுகுறித்து உளவுத்துறையிடம் விசாரிக்கச் சொல்லியிருந்திருக்கிறார் எடப்பாடி. அதனை விசாரித்த உளவுத்துறையும், ஊழல் புகார் உண்மைதான் என சொல்லியுள்ளது. முதல்கட்டமாக 5 மாவட்ட ஆட்சியர்கள் இந்த ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளனர். 
       

அவர்கள் மீது நவடிக்கை எடுக்க தயாராகி வருகிறாராம் எடப்பாடி. ஆனால், இதனை அறிந்த சம்மந்தப்பட்ட ஆட்சியர்கள், அமைச்சர்கள் மற்றும் கோட்டையிலுள்ள உயரதிகாரிகள் மூலம் அதனை தடுக்கு வகையில் லாபி செய்து வருகின்றனர். இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர்களாக சுமார் 4 வருடங்களை கடந்திருக்கும் சிலரை வேறு இடங்களுக்கு மாற்றவும் தலைமைச் செயலர் சண்முகத்திடம் விவாதித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.