Skip to main content

பெண்களை குறிவைக்கும் கிரிமினல்கள்! -சென்னை பயங்கரம்!

Published on 15/02/2018 | Edited on 16/02/2018
எடப்பாடி ஆட்சியின் ஓராண்டு "சாதனை'க்கு சாட்சியாக இருக்கிறார்கள் பெண்களைத் துரத்தும் கிரிமினல்கள். பிப்ரவரி 11-ஆம் தேதி நகைப் பறிப்பு திருடர்கள், அரும்பாக்கத்தில் நகைக்காக மேனகா என்பவரைத் தரதரவென்று இழுத்துச்சென்ற வீடியோ காட்சி பரபரப்பானது. அதே தினத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

வழிப்பறியில் ஈடுபட்ட பெண்ணுக்குக் கரோனா... பிடித்துக் கொடுத்த பொது மக்கள்... பீதியில் போலீசார்! 

Published on 07/07/2020 | Edited on 07/07/2020

 

corona

 

கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ளது வானதிராயபுரம். இந்தக் கிராம பஸ் ஸ்டாப் அருகில் கடந்த 3ஆம் தேதி ஒரு தம்பதி அவ்வழியே சென்றவர்களிடம் நகை பறிக்க முயன்றனர். அவர்களைச் சுற்றிவளைத்துப் பிடித்த பொதுமக்கள் வடலூர் போலீசில் ஒப்படைத்தனர். 

 

போலீஸ் விசாரணையில் கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் பகுதி சௌடேஸ்வரி நகரைச் சேர்ந்த கணவன் மனைவி அவர்கள் இருவரும் என்பது தெரியவந்தது. அவர்கள் இருவரும் இதேபோன்று பல்வேறு பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும் இவர்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கு இருப்பதும் தெரியவந்தது.

 

அந்த இருவரையும் கடந்த 4ஆம் தேதி கடலூர் சிறைக்கு அனுப்புவதற்கு முன்பு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பிறகு அவர்கள் இருவரையும் நீதிமன்றம் மூலம் சிறைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று அந்தப் பெண் கைதிக்குக் கரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இந்தத் தகவல் பரவியதும் அந்தப் பெண்ணைப் பிடித்துக் கொடுத்த பொதுமக்களும் வடலூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் 20க்கு மேற்பட்ட காவலர்களும் அதிர்ச்சியில் உள்ளனர்.

 

இதையடுத்து வடலூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் 20 காவலர்களுக்கு ஆரம்ப சுகாதார நிலைய குழுவினர் பரிசோதனை செய்துள்ளனர். மீதியுள்ள போலீசாருக்கும் பரிசோதனை நடைபெற உள்ளது. வடலூர் போலீஸ் ஸ்டேஷனில் கிருமி நாசினி தெளித்து நோட்டீஸ் ஒட்டப்பட்டது. அந்தப் பெண்ணைச் சுற்றி வளைத்துப் பிடித்த பொதுமக்கள் நமக்கும் கரோனா தொற்று பரவியிருக்குமோ என்ற அச்சத்தில் உள்ளனர். திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடக்கூடியவர்களைப் பிடிக்கக் கூட பயப்படும் நிலையை உருவாக்கியுள்ளது இந்தக்  கரோனா.

 

 

Next Story

பட்டப்பகலில் வேண்டுமென்றே விபத்தை உருவாக்கி 106 பவுன் கொள்ளை!!

Published on 05/06/2019 | Edited on 05/06/2019

கோவை ராம்நகரில் நகை பட்டறையில் வேலை பார்க்கும் நபரை மோட்டார் சைக்கிளில் மோதி வேண்டுமென்றே விபத்து உருவாக்கி அவருக்கு உதவி செய்வது போல் அவர் கையிலிருந்த 106 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற வழக்கில் நான்கு பேர் பிடிபட்டுள்ளனர்.

 

கோவை கடைவீதி பகுதியில் நகைப்பட்டறை நடத்தி வருபவர் சுரேஷ், இவரிடம் பணியாற்றுபவர் ராமமூர்த்தி இவர் சுரேஷிடம் இருந்து 106 சவரன் தங்க நகைகளை பெற்றுக்கொண்டு தாராபுரத்தில் உள்ள நகை கடைக்கு கொடுப்பதற்காக சென்றுள்ளார். காந்திபுரம் நோக்கி ராம் நகர் வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற போது ஒருவர் வேண்டுமென்றே அவரது இருசக்கர வாகனத்தில் மோதி விபத்தை ஏற்படுத்தி உள்ளார். அந்த இரு சக்கர வாகனத்தில் பின்பக்கம்  இருந்தவர் கீழே விழுந்தவரை காப்பாற்றுவது போல் இறங்கி அவருக்கு உதவி புரிந்துள்ளார்.

 

​ robbery ​ robbery

 

அப்பொழுது பின்னால் மற்றொரு வாகனத்தில் வந்த இருவர் விபத்து நடந்தது கண்டு ராமமூர்த்திக்கு உதவுவதை போல் பாவனை செய்தனர். அவர்களுடன் விபத்தை ஏற்படுத்தியவரும் அவருக்கு உதவி செய்ய முயன்றார். இதனையடுத்து பொதுமக்கள் கூட்டம் கூடியதால் அருகில் உள்ள கடை வாசலில் அமர்ந்து இளைப்பாற வைப்பதற்காக ராமமூர்த்தியை கைத்தாங்கலாகப் பிடித்துக்கொண்டு செல்ல முயல்வதுபோல ராமமூர்த்தி கையில் வைத்திருந்த பேக்கை எடுத்துக்கொண்டு விபத்தை ஏற்படுத்தியரே உதவுவது போன்று நடித்தார். 

 

​ robbery

 

ஆசுவாசப் படுத்த அழைத்துச் செல்வது போல் நைசாக அவரது கைப்பையை விபத்து ஏற்படுத்தியவர் கையிலேயே வைத்திருக்க முயற்சி செய்தார். இருப்பினும் அதனை உணரந்த ராமமூர்த்தி கைப்பையை உடனடியாக பெற்றுக்கொண்டார். இருப்பினும் சிறிது நேரம் கழித்து அவரிடம் இருந்து அதேபோல கைப்பையை நைசாக எடுத்துக்கு கொண்ட கொள்ளையன் ஹெல்மெட்டையும் கையில் பிடித்துக் கொண்டு அவரை கைத்தாங்கலாக ஒரு கடையின் வாயிலில் அமர வைக்க முயற்சி செய்தான். அப்படியே கூட்டத்தில் இருந்து  நகை பையை சப்தமின்றி நைசாக தூக்கிக்கொண்டு வெளியே அவனுக்காக காத்துகொண்டு இருந்த இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பித்தான். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகி இருந்தது.

 

​ robbery

 

அதில் ஒருவன் தேனியைச் சேர்ந்த ராஜா என கண்டறிந்த போலீசார் அவனை கைது செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் நகை பட்டறை தொழிலாளியான பத்ரி  மற்றும் அவரது நண்பர்கள் டேனியல், விக்கி, சங்கீதா ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்யத்துள்ளனர்.