Skip to main content

இன்றைய ராசிபலன் -27.04.2024

Published on 26/04/2024 | Edited on 27/04/2024

 

Today rasi palan - 26.04.2024

இன்றைய  பஞ்சாங்கம்

27-04-2024, சித்திரை 14, சனிக்கிழமை, திரிதியை திதி காலை 08.18 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. கேட்டை நட்சத்திரம் பின்இரவு 04.28 வரை பின்பு மூலம். நாள் முழுவதும் சித்தயோகம். சங்கடஹர சதுர்த்தி விரதம். விநாயகர் வழிபாடு நல்லது. 

இராகு காலம் - காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

இன்றைய ராசி பலன் - 27.04.2024

mesham

மேஷம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறுசிறு மனசங்கடங்கள் ஏற்படலாம். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
 

reshabam

ரிஷபம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். உறவினர்களால் உங்கள் பிரச்சினைகள் குறையும். எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி கிட்டும். சிந்தித்து செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் நல்ல லாபத்தை அடைவீர்கள். உத்தியோகத்தில் சக நண்பர்களின் ஆதரவு கிட்டும்.


3

மிதுனம் 

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகத்தால் நற்பலன்கள் கிட்டும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும்.


kadagam

கடகம்

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்ய நேரிடும். உற்றார் உறவினர்களின் செயல்களால் மனநிம்மதி குறையும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது, எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபார ரீதியாக லாபம் அதிகரிக்கும், மறைமுக பகை நீங்கும்.
 

5

சிம்மம்

இன்று வேலையில் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும். மனைவி வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். தொழிலில் இருந்த தேக்க நிலை பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பால் மாறும். சுபகாரியங்கள் கைகூடும்.

kannirasi

கன்னி

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். இதுவரை இருந்த குழப்பங்கள் பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறையும். உத்தியோக ரீதியான பயணங்களில் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிட்டும். சுப காரிய பேச்சுவார்த்தைகளில் சாதகமான பலன்கள் உண்டாகும்.

thulam

துலாம்

இன்று உறவினர்கள் வருகையால் மனநிம்மதி குறையலாம். கொடுத்த கடன் பெறுவதில் தாமதம் உண்டாகும். தொழில் முன்னேற்றத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிட்டும். எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும்.
 

viruchagam

விருச்சிகம்

இன்று பிள்ளைகள் வகையில் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளியூரிலிருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும்.

danush

தனுசு

இன்று உங்களுக்கு வரவேண்டிய பணவரவில் சிறு தடை தாமதங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். பெரிய மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன்கள் ஏற்படும். தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் லாபம் கிட்டும்.
 


magaram

மகரம்

இன்று பிள்ளைகள் வழியில் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபாரத்தில் நற்பலன்களை தரும். உங்கள் மீதிருந்த பழிச்சொற்கள் நீங்கும். ஆன்மீக காரியங்கள் செய்வதற்கான வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் பணிச்சுமை குறையும்.
 

kumbam

கும்பம்

இன்று நீங்கள் எந்த செயலையும் மனமகிழ்ச்சியுடன் செய்வீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் இருப்பார்கள். உத்தியோகத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் நல்ல லாபம் கிட்டும். தேவைகள் பூர்த்தியாகும்.
 

meenam

மீனம்

இன்று பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்ல வேண்டி இருக்கும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண பற்றாக்குறையை தவிர்க்கலாம். புதிய பொருட்களை வாங்கும் போது கவனமாக இருப்பது நல்லது. எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.