Skip to main content

"சினிமா என்பது பெரிய ஆலமரம் எல்லாம் கிடையாது" - நடிகர் மாரிமுத்து 

Published on 29/01/2022 | Edited on 29/01/2022
gegsgbs


இயக்குனரும், நடிகருமான மாரிமுத்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த மருத படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இப்படத்துக்கான ப்ரோமோஷன் பணியின் போது நடிகர் மாரிமுத்து நமக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் படங்களின் ரிலீஸ் குறித்து பேசியபோது.... 

 

இன்றைய சூழலில் ஒரு படத்தை எடுத்து ரிலீஸ் செய்வதே பெரும் போராட்டமாக இருக்கிறது. அப்படியே கஷ்டப்பட்டு ரிலீஸ் செய்தாலும் படம் சரியாக ஓட முடிவதில்லை. நான் இயக்கிய கண்ணும் கண்ணும் படத்தை ரிலீஸ் செய்ய படாத பாடுபட்டேன். படம் எடுப்பது மட்டுமே நம் கையில் இருக்கிறது. மற்றவை நம் கையில் இல்லை. இதுவே அஜித், விஜய், ரஜினி, கமல், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோரின் படங்களாக இருந்தால் எந்த பிரச்சனையும் இன்றி ரிலீசாகும். அவை ராஜா வீட்டு கன்னுகுட்டி. அவைகளுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது. ஆனால் மற்ற படங்கள் அனைத்தும் டெட் பாடிதான். அவைகளை ரிலீஸ் செய்ய நாம் தோளில் தூக்கிக்கொண்டு சுமக்கத்தான் வேண்டும். சினிமா என்பது பெரிய ஆலமரம் எல்லாம் கிடையாது. அது வெறும் மூன்று நாள் வெள்ளி, சனி, ஞாயிறு நடக்கும் ஆட்டமே. நாம் எதையும் நிர்ணயிக்க முடியாது" என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்