Skip to main content

கமல் - ஆர்யா திடீர் சந்திப்பு!

Published on 10/12/2020 | Edited on 10/12/2020

 

kamal hassan

 

நடிகர் ஆர்யா, இயக்குனர் ரஞ்சித் இயக்கி வரும், 'சார்பட்டா பரம்பரை' திரைப்படத்தில் நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில், கமல், ஆர்யா இடையே திடீர் சந்திப்பு நடந்துள்ளது. இத்தகவலை, நடிகர் ஆர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

அந்தப்பதிவில், சர்பட்டா பரம்பரை படத்தில் இடம்பெற்றுள்ள தன்னுடைய காட்சிகளை அவரிடம் காட்டியதாகவும், அது குறித்து கமல்ஹாசன் பல கருத்துகளைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றியும் தெரிவித்துள்ளார். மேலும், அப்பதிவில் இதை விடச் சிறந்த பிறந்தநாள் பரிசை நான் கேட்டுவிட முடியாது என்றும் அவரிடம் இருந்து தினமும் தான் கற்றுவருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்