Skip to main content

டிவில்லியர்ஸைத் தொடர்ந்து டீகாக்கை வம்பிழுத்த டேவிட் வார்னர்! - வைரலாகும் வீடியோ

Published on 05/03/2018 | Edited on 05/03/2018

டிவில்லியர்ஸை அவமதித்து களத்திற்குள் திட்டித்தீர்த்த வார்னர், மைதானத்திற்கு வெளியே குயிண்டன் டீகாக்கை வம்பிழுக்கும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.

 

DeKock

 

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, அங்கு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி டர்பனில் உள்ள கிங்க்ஸ்மீட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இரண்டாவது இன்னிங்க்ஸில் 417 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியினர் சொற்ப ரன்களில் வெளியேறினர். 

 

அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஒரு ரன் எடுப்பதற்காக பந்தைத் தட்டிவிட்டு ஓடிய அவர், வார்னர்/நாதன் லயன் இணையின் முயற்சியால் ரன்அவுட் ஆனார். அப்போது, டிவில்லியர்ஸை ரன்அவுட்டாக்கிய மகிழ்ச்சியில் ஓடிய லயன், தன் கையில் இருந்த பந்தை வேண்டுமென்றே டிவில்லியர்ஸ் மீது  ஏளனமாக போட்டுவிட்டு சென்றார். இது கேமராவில் பதிவாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், அப்போது டிவில்லியர்ஸை ஆஸ்திரேலிய வீரர் வார்னர் கடுமையான வார்த்தைகளால் பேசியுள்ளார்.

 

இந்நிலையில், ஆட்டநேரம் முடிந்து டிரெஸ்ஸிங் ரூமுக்கு வீரர்கள் சென்று கொண்டிருந்தபோது, டீகாக்கை வார்னர் கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளார். அப்போது அவரை சக வீரர்கள் சமாதானப்படுத்தி அழைத்துச் செல்வது மாதிரியான காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. 

 

 

ஆஸ்திரேலிய வீரர்களின் இந்த செயல்பாடுகள் குறித்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உறுதியளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.