Skip to main content

ஒலிம்பிக் கிராமத்தில் கரோனா பாதிப்பு!

Published on 17/07/2021 | Edited on 17/07/2021

 

OLYMPIC

 

ஒலிம்பிக் போட்டிகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்றுவரும் நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. ஒத்திவைக்கப்பட்ட இந்த ஒலிம்பிக் போட்டிகள், இந்த மாதம் 23ஆம் தேதியிலிருந்து தொடங்க இருக்கிறது. கரோனா பரவல் காரணமாக ஒலிம்பிக்கில் பங்கேற்கும் அணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

 

இந்தநிலையில், ஒலிம்பிக் கிராமத்தில் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனை டோக்கியோ 2020 தலைமை நிர்வாக அதிகாரி தோஷிரோ முட்டோ உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், ஒலிம்பிக் கிராமத்தில் கரோனா உறுதி செய்யப்பட்ட நபர், விளையாட்டு போட்டிகளை ஏற்பாடு செய்ய வந்தவர் எனவும் தோஷிரோ முட்டோ கூறியுள்ளார்.

 

அதேசமயம் கரோனாவால் பாதிக்கப்பட்டவர் எந்த நாட்டைச் சேர்த்தவர் என்பது வெளியிடப்படவில்லை. அதுகுறித்த தகவல் வெளியிடப்படக் கூடாது என ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு முடிவு செய்துள்ளது.