Skip to main content

"எனது இரண்டாவது குழந்தை இவரது தீவிர ரசிகை..." இந்திய வீரரைக் குறிப்பிட்ட வார்னர் மனைவி!

Published on 19/11/2020 | Edited on 19/11/2020

 

Candice Warner

 

எனது இரண்டாவது குழந்தை, விராட் கோலியின் தீவிர ரசிகை என ஆஸ்திரேலிய அணி வீரரான டேவிட் வார்னரின் மனைவி தெரிவித்துள்ளார்.

 

சிட்னியில் உள்ள வானொலி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய டேவிட் வார்னரின் மனைவியான கேண்டீஸ் வார்னர், "எங்கள் வீட்டின் பின்புறம் நாங்கள் கிரிக்கெட் விளையாடுவோம். என்னுடைய மகள்கள் சில நேரம் அவரது தந்தையைப் போல விளையாட நினைப்பார்கள். சில நேரம் ஆரோன் பின்ச் மாதிரி விளையாட நினைப்பார்கள். ஆனால், என்னுடைய இரண்டாவது மகள் விராட் கோலியின் தீவிரமான ரசிகை. அவள் விராட் கோலியாக வேண்டும் என்று விரும்புகிறாள்" எனக் கூறினார்.

 

மேலும், வார்னருடன் கிரிக்கெட் விளையாடுவது குறித்துப் பேசுகையில், "வார்னர் குழந்தைகளுக்கு பவுன்சர் வகை பந்துகளை வீசுவார். குழந்தைகள் நான்கு, ஆறு ரன்கள் அடிக்கவே ஆசைப்படுவார்கள். வார்னரிடம், பவுன்சர், சுழற்பந்து வேண்டாம் என்று அடிக்கடி கூறுவார்கள். வீட்டின் பின்புறம் அவர்களுக்கு இடையான வார்த்தை உரசல்கள் இன்னும் நடக்கின்றன" எனக் கூறினார்.