Skip to main content

“கடைசி நிமிடங்களில் BP மாத்திரை போட வைத்தனர்” - ஜெயக்குமார்

Published on 30/05/2023 | Edited on 30/05/2023

 

AIADMK Jayakumar on Chennai Gujarat IPL final match

 

16 ஆவது ஐபிஎல் போட்டியில் சென்னை - குஜராத் அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டி நேற்று முன்தினம் மழை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், நேற்று மீண்டும் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து களத்தில் இறங்கிய சென்னை அணி 15 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 171 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. வெற்றியின் மூலம் சென்னை அணி 5 ஆவது முறையாக கோப்பையை வென்றது.

 

14 ஐபிஎல் சீசன்களில் விளையாடியுள்ள சென்னை அணி 12 முறை ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அதில் தோனி தலைமையில் 10 முறை இறுதிப் போட்டிக்குச் சென்று நேற்றுடன் 5 முறை கோப்பையையும் கைப்பற்றியுள்ளது. ஐபிஎல் தொடரில் 250 போட்டிகள் விளையாடிய வீரர் என்ற பெருமையையும் தோனி பெற்றுள்ளார். அதில் 349 பவுண்டரிகளுடனும் 239 சிக்ஸர்களுடனும் மொத்தமாக 5,082 ரன்களைக் குவித்துள்ளார். 

 

இந்நிலையில் நேற்றைய போட்டி குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ட்விட்டரில் தனது கருத்தை பகிர்ந்துள்ளார். அவர் அதில் கூறியதாவது, “எப்போதும் போல எல்லோரையும் கடைசி நிமிடங்களில் BP மாத்திரை போட வைத்த போட்டி.. வியூகங்கள் எதிரணியை மட்டுமல்ல ரசிகர்களையும் வியப்படைய செய்கிறது. ஐந்தாவது முறையாக கோப்பையையும் மக்கள் மனங்களையும் வென்றெடுத்து விட்டார் தோனி. தோனி ஒரு சகாப்தம்! வாழ்த்துக்கள் சென்னை சூப்பர் கிங்ஸ்” எனப் பதிவிட்டுள்ளார்.