Skip to main content

வெளிநாட்டு மருத்துவ படிப்புகள் நம் நாட்டு படிப்புகளுக்கு இணையானதுதானா..? - கல்வி ஆலோசகர் விளக்கம்

Published on 07/05/2022 | Edited on 07/05/2022

 

educationist subash chandrabose explains scope of medical studies in abroad

 

ஒரு நாட்டின் அடிப்படை வளர்ச்சியைக் கணக்கிடுவதில் மிக முக்கியமானதொரு காரணி சுகாதாரம். மக்களின் நலமே ஒரு நாட்டின் எதிர்காலத்தை முடிவு செய்கிறது என்றுகூடச் சொல்லலாம். இப்படிப்பட்ட ஆரோக்கியத்தைப் பேணிக்காக்கும் மருத்துவர்களைத் தரமான அடித்தளத்தோடு உருவாக்க ஒவ்வொரு நாடும் சிறப்பான மருத்துவ கல்வியை அவர்களுக்கு வழங்கப் பாடுபடுகின்றன. இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல. பெருகிவரும் மக்கள்தொகையும் மாசுபாடுகளும் புதிய புதிய நோய்களுக்கு வழிவகுத்து வரும் இன்றைய சூழலில், இந்தியாவின் இளந்தலைமுறையினரிடமும் நிரம்பிக் கிடக்கிறது மருத்துவராகும் கனவுகள். ஆனால், நீட் தேர்வு, சீட்களின் குறைவான எண்ணிக்கை உள்ளிட்ட பல காரணங்களால் மாணவர்கள் பலரும் மருத்துவ படிப்பில் சேர முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியக் கல்வி சூழ்நிலைகளின் காரணமாக மருத்துவ சேர்க்கை இடம் கிடைக்கப்பெறாத மாணவர்களுக்கான மாற்று வழியாகப் பார்க்கப்படுகிறது வெளிநாட்டு மருத்துவ படிப்புகள். ஆனால், வெளிநாடுகளுக்குச் சென்று மருத்துவம் படிப்பது தொடர்பான பல சந்தேகங்கள் பெற்றோர் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் இருந்து வருகின்றன. இப்படியான சில சந்தேகங்களுக்கு நக்கீரன் வாயிலாகப் பதிலளித்துள்ளார் டிவைன் மெடிக்கஸ் எஜுகேஷன் நிறுவனத்தைச் சேர்ந்த கல்வி ஆலோசகர் சுபாஷ் சந்திரபோஸ். நமது சந்தேகங்களுக்கு அவரின் பதில்கள் பின்வருமாறு...

ss

மருத்துவ கல்வி சார்ந்த படிப்புகளுக்கான வாய்ப்பு நமது நாட்டில் தற்போது எப்படி உள்ளது..?

மருத்துவத்துறைக்கான தேவை எப்போதுமே நமக்கு இருந்துகொண்டேதான் இருக்கிறது. ஒரு நாடு வளர்ச்சியைப் பெறவேண்டுமென்றால், அதற்கு மக்களின் ஆரோக்கியம் மிக முக்கியம். அதற்கு மருத்துவர்கள் கண்டிப்பாக எப்போதும் தேவை. இப்போது மொத்தமாக 16.5 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதியுள்ளனர். ஆனால், இந்தியாவில் தனியார் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளைச் சேர்த்தே மொத்தம் 80,000 சீட்டுகள் தான் உள்ளன. நமது நாட்டு மக்கள்தொகை அடிப்படையில் இன்னும் 20 லட்சம் மருத்துவர்கள் நம் நாட்டுக்குத் தேவைப்படுவதாக ஒரு அறிக்கை சொல்கிறது. ஆனால், ஆண்டுக்கு நம்மால் 80,000 மருத்துவர்களைத்தான் உருவாக்க முடியும். இதனை சரிசெய்யவே இன்னும் சில ஆண்டுகள் ஆகும். எனவே, இந்தியாவில் மருத்துவர்களுக்கான தேவை இருந்துகொண்டு தான் இருக்கிறது.

 

மருத்துவ படிப்பிற்கான நமது கல்விக்கொள்கைகளால் மெரிட்டில் வாய்ப்பு கிடைக்காமல் போகும் மாணவர்கள் மற்றும் மேனேஜ்மேண்ட் சீட்டில் சேர்ந்து படிக்க வசதி இல்லாத மாணவர்கள் மருத்துவர்களாவதற்கு வேறு என்ன வழிமுறைகள் இருக்கின்றன..?

நமது தமிழ்நாட்டிலேயே பார்த்தோமென்றால் சுமார் 60,000 பேர் நீட் தேர்வில் தகுதி பெற்றிருக்கிறார்கள். ஆனால், நம் மாநிலத்தில் சுமார் 10,000 மருத்துவ படிப்புக்கான இடங்கள்தான் உள்ளன. தேர்வில் வென்றவர்கள் பலருக்கே இங்கு இடம் கிடைப்பது கடினம். மிகவும் நல்ல மதிப்பெண்கள் எடுத்தால் அரசு கல்லூரிகளில் இடம் கிடைக்கும். அப்படியில்லையென்றால் மேனேஜ்மேண்ட் சீட்டில் இடம் கிடைக்கும். ஆனால், படித்து முடிப்பதற்கு ஒரு கோடி ரூபாய் செலவாகும். பணம் மற்றும் மதிப்பெண் இல்லாத மாணவர்கள் அடுத்த நீட் தேர்வுக்காகப் பயிற்சி எடுப்பார்கள். அல்லது சிலர் வெளிநாடுகளுக்குச் செல்வார்கள். இல்லையென்றால் மருத்துவத்தை விட்டுவிட்டு வேறு துறைகளுக்குச் சென்றுவிடுவார்கள். ஆனால், துறையை மாற்றி செல்வதை விட முயற்சி செய்து ஏதேனும் ஒரு வழியில் மாணவர்கள் தங்கள் கனவுகளை அடைவதே சிறந்தது என நான் சொல்லுவேன்.

 

இந்திய மாணவர்களுக்கு வெளிநாடுகளுக்குச் சென்று படிக்கும் மருத்துவ படிப்புகள் நமது நாட்டு படிப்புகளுக்கு இணையானதுதானா..? சட்டப்படி அங்கு படித்த படிப்பு இங்கு செல்லுமா..?

கண்டிப்பாக வெளிநாடுகளில் மாணவர்கள் படிக்கலாம். நமது தேசிய மருத்துவ ஆணையம் அங்கீகரித்துள்ள கல்லூரிகளில் நாம் மருத்துவம் படிக்கலாம். படித்து முடித்து இந்தியா வந்தபிறகு ஒரு தகுதித் தேர்வை எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்ற பின்பு உரிமம் பெற்று மருத்துவம் பார்க்கலாம். இந்திரா காந்தி காலத்தில் ரஷ்யாவில் அதிக இந்தியர்கள் மருத்துவம் படித்தனர். அதன் பின்னர் கடந்த 15 ஆண்டுகளாக பிலிப்பைன்ஸ் நாட்டில் அதிகமான இந்தியர்கள் மருத்துவம் படித்தனர். இப்போதைய சூழல்படி 50 நாடுகளில் சுமார் 100 கல்லூரிகளில் இந்திய மாணவர்கள் மருத்துவம் படிக்கின்றனர்.

 

வெளிநாட்டில் மருத்துவம் படிக்க ஆசைப்படும் மாணவர்கள் எங்கு படிக்கலாம் என்பதை எப்படித் தேர்ந்தெடுப்பது..? முதுகலை மருத்துவம் படிக்க என்ன செய்யலாம்..?

பொதுவாக மேல்நாடுகளில் செப்டம்பர் மாதம் ஒரு சேர்க்கையும் ஜனவரி மாதம் ஒரு சேர்க்கையும் நடைபெறும். சேர்க்கையைப் பொறுத்துப் படிப்பின் முடிவும் இருக்கும். எந்த நாட்டில் படிக்கலாம் என்ற சந்தேகத்துடன் எங்களிடம் வரும் பெற்றோர்களிடம் நாங்கள் இரண்டு முக்கியமான காரணிகளை அடிப்படையாக வைத்தே யோசனைகளைச் சொல்லுவோம். முதலாவதாக அவர்கள் படிக்கப்போகும் நாட்டில் மொழி பிரச்சனை இல்லாமல் இருக்கிறதா என உறுதி செய்வோம். புதிய மொழியைக் கற்றுக்கொள்ளாமல் நமக்கு ஏற்கனவே பழக்கப்பட்ட ஆங்கிலத்திலேயே நம் கல்வியை முடிக்கக்கூடிய நாடுகளையே முதலில் தேர்ந்தெடுப்போம். அதற்கடுத்து சீதோஷண நிலை. இந்தியா போன்ற சீதோஷண நிலை உள்ள நாடுகளைத் தேர்ந்தெடுப்பது மாணவர்களுக்குப் பயனுள்ளதாக அமையும். இவை இரண்டிற்கும் அடுத்ததாக, அவர்கள் படிக்கப்போகும் கல்லூரியின் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் எப்படி இருக்கின்றன என்பதை ஆராய்ந்து இறுதி முடிவை எடுக்கலாம்.

 

இதுமட்டுமல்லாமல் ஜமைக்கா போன்ற கரீபியன் நாடுகளில் இளங்கலை மருத்துவம் படிக்கும்போதே மாணவர்களுக்கு முதுகலை படிப்பு மற்றும் தேர்வுக்கான பயிற்சியும் வழங்கப்பட்டு இலவச முதுகலை பட்டம் கிடைக்கிறது. உதாரணமாக, அமெரிக்கா அருகில் உள்ள ஜமைக்காவைச் சேர்ந்த ஆல் அமெரிக்கன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் கல்லூரிக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக நாங்கள் மாணவர்களை அனுப்புகிறோம். அங்கு இளங்கலை படிக்கும் மாணவர்கள் அமெரிக்காவில் நடத்தப்படும் USMLE தேர்வை எழுதி, அதில் தகுதி பெற்றுவிட்டால், ஐந்து லட்ச ரூபாய் உதவித்தொகையோடு இலவச முதுகலை கல்வியும், அங்கேயே மருத்துவம் பார்ப்பதற்கான உரிமமும் கிடைக்கிறது. அமெரிக்காவில் கொடுக்கப்படும் இந்த உரிமத்தை வைத்து உலகின் 190 நாடுகளில் மருத்துவம் பார்க்க முடியும். எனவே, இந்தியாவில் வாய்ப்பு மறுக்கப்படுகிற மாணவர்கள் தங்களது கனவினை விட்டுவிடாமல் வெளிநாடுகளில் படிப்பது போன்ற பிற வழிகளில் அதனை அடைய முயற்சிக்க வேண்டும்.

ஆல் அமெரிக்கன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ், ஜமைக்காவின் சிறப்பம்சங்கள்

1) இந்தியர்களுக்கு உகந்த சீதோஷண நிலை
2) ஆங்கில மொழி பேசுபவர்களை கொண்ட நிலப்பரப்பு
3) சிறந்த உட்கட்டமைப்பு
4) நன்கு வரையறுக்கப்பட்ட பாடத்திட்டங்கள்
5) உலகத்தரம் வாய்ந்த மருத்துவ பயிற்சி
6) உள்ளமைக்கப்பட்ட USMLE பயிற்சி
7) படிப்பின் மொத்த காலஅளவு 4.8 ஆண்டுகள்
8) நான்கு ஆண்டுக்கான கல்விக்கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும்
9) கல்லூரி வளாகத்துடன் இணைந்த தங்குமிட வசதி (தென்னிந்திய உணவு வகைகளுடன்)

 

வெளிநாட்டில் மருத்துவம் படிப்பது குறித்தான மேலும் தகவல்களுக்கு:

ஆல் அமெரிக்கன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ், ஜமைக்கா.
+919282244577 / 04424792577 
www.aaimsindia.com