Skip to main content

'சின்ஜியாங்கில் இனப்படுகொலை செய்யும் சீனா' - குளிர்கால கூட்டத்தொடரை புறக்கணித்த அமெரிக்கா!

Published on 07/12/2021 | Edited on 07/12/2021

 

JOE BIDEN

 

ஒலிம்பிக் போட்டிகள், பாராஒலிம்பிக் போட்டிகள், குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆகியவை ஒருநாட்டில் நடைபெறும்போது, மற்ற நாடுகளின் அமைச்சர்கள், அதிகாரிகள் அந்தப் போட்டிகளைக் காண சிறப்பு தூதர்களாக பங்கேற்பார்கள். இந்நிலையில், குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டு சீனாவில் நடைபெறவுள்ளது.

 

இதனையடுத்து, இந்தக் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை இராஜாங்க ரீதியில் புறக்கணிப்பது குறித்து அமெரிக்கா சமீபகாலமாக ஆலோசித்துவந்தது. அதன்தொடர்ச்சியாக தற்போது, குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை இராஜாங்க ரீதியில் புறக்கணிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

 

சின்ஜியாங்கில் நடந்துகொண்டிருக்கும் இனப்படுகொலை மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், பிற மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றைக் கண்டிக்கும் விதத்தில் அமெரிக்கா இந்த முடிவினை எடுத்துள்ளது. இதன் காரணமாக சீனாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு அமெரிக்கா, தூதர்களையோ அதிகாரபூர்வ பிரதிநிதிகளையோ அனுப்பாது. அதேநேரத்தில், அமெரிக்க வீரர்கள் போட்டியில் பங்கேற்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஏற்கனவே சீனா, இதுபோன்ற புறக்கணிப்பு நடவடிக்கைகளுக்குத் தக்க பதில் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்