Skip to main content

லண்டனில் இந்திய தூதரகத்தை முற்றுகையிட்ட பாகிஸ்தானியர்கள்...

Published on 16/08/2019 | Edited on 16/08/2019

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததுடன், அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்து சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது.

 

pakistanis protest before indian embassy in london

 

 

இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சுதந்திர தினமான நேற்று லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன் திரண்ட பாகிஸ்தானியர்கள் அந்நாட்டு கொடியை கைகளில் ஏந்தியபடி இந்தியாவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இது நடக்க ஆரம்பித்த சிறிது நேரத்தில் அங்கு கூடிய இந்தியர்கள் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு ஆதரவு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதையடுத்து இருதரப்பினரையும் போலீசார் அப்புறப்படுத்த முயன்ற நிலையில், தள்ளு முள்ளு ஏற்பட்டது. 

 

 

சார்ந்த செய்திகள்