Skip to main content

டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளைத் தொடர்ந்து விற்று வரும் எலான் மஸ்க்

Published on 11/08/2022 | Edited on 11/08/2022

 

Elon Musk continues to sell Tesla shares!

 

டெஸ்லா நிறுவனத்தின் 54,000 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை எலான் மஸ்க் விற்பனை செய்துள்ளார். 

 

உலக பெரும் பணக்காரரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை சமீபத்தில் கைவிட்டார். இந்த முடிவை எதிர்த்து ட்விட்டர் நிறுவனம், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதத்தில் 8.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள டெஸ்லா பங்குகளை எலான் மஸ்க் விற்பனை செய்தார். 

 

தற்போது, எலான் மஸ்க் 7 பில்லியன் டாலர் மதிப்புள்ள டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளை விற்றுள்ளார். இது இந்திய மதிப்பில் சுமார் 54,000 கோடி ரூபாயாகும். ஒரு வேளை ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை செயல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், குறைந்த விலையில் டெஸ்லா பங்குகளை விற்க வேண்டிய சூழலைத் தவிர்ப்பதற்காகவே விற்பனை செய்வதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். 

 

வரும் ஆகஸ்ட் 5- ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 9- ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் டெஸ்லா நிறுவனத்தின் சுமார் 79 லட்சத்திற்கும் மேற்பட்ட பங்குகளை அவர் விற்றுள்ளார். கடந்த 10 மாதங்களில் மட்டும் 3,200 கோடி டாலர் மதிப்பிலான பங்குகளை எலான் மஸ்க் விற்றுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்