Skip to main content

பாஸ்வேர்ட் தெரியாததால் முடங்கி கிடக்கும் 1360 கோடி பணம்...

Published on 07/02/2019 | Edited on 07/02/2019

 

fghfhgfh

 

கனடாவைச் சேர்ந்த ஒரு கிரிப்டோகரன்சி நிறுவனத்தின் சி.இ.ஓ இறந்துபோனதால் அவரது கணக்கிலிருந்து 1360 கோடி பணத்தை எடுக்கமுடியாமல் அவரது குடும்பத்தினர் மற்றும் அலுவலக ஊழியர்கள் திணறி வருகின்றனர். குவாட்ரிகா சி எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனரான 30 வயதுடைய ஜெரால்டு காட்டன் குடல் வீக்க நோயினால் இந்தியாவில் இறந்துபோனார். அவர் நிர்வகித்து வந்த 190 மில்லியன் டாலர் மதிப்பிலான முதலீட்டாளர்களின் பணம், பரிவர்த்தனைக்கான பாஸ்வேர்டு தெரியாததால் அந்த நிறுவனம் முற்றிலுமாக முடங்கியுள்ளது. முதலீட்டாளர்களின் பரிவர்த்தனைகளை உபயோகப்படுத்தப்படும் பாஸ்வேர்ட் ஜெரால்டுக்கு மட்டுமே தெரியும் என்பதால், தற்போது அவர் இல்லாத நிலையில் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாமல் அந்த நிறுவனம் தவித்து வருகிறது. மேலும் இந்தியாவிற்கு ஆதரவற்றோர் இல்லம் ஒன்றை திறப்பதற்காக வந்தபோது அவர் இறந்துவிட்டதாக அவர் மனைவியால் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அவரது நிறுவனத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு கருத்துக்கள் அந்நாட்டில் எழுந்து வருகின்றன.

 


 

சார்ந்த செய்திகள்