Skip to main content

தலைகவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டிய மருத்துவர் பலி. 

Published on 03/10/2019 | Edited on 03/10/2019

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த டாக்டர் பெனடிக்ட், அவருடன் பணிபுரிந்து வந்த  ஜூலியா ஆகிய இருவரும் அக்டோபர் 3 ந்தேதி இருசக்கர வாகனத்தில் வேலூரில் இருந்து ஆம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். 
 

ஆம்பூர் அடுத்த வெங்கல் அருகே வந்த போது பைக் சாலையின் மையத்தில் இருந்த தடுப்புச் சுவர் மீது மோதி  இருவரும் சாலையில் விழுந்தனர். இதில் இருவரும் படுகாயமடைந்தனர், இதனைப்பார்த்துவிட்டு சக வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு முதலுதவி செய்தனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலமாக இருவரையும் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

 without wearing helmet TWO DOCTORS INCIDENT IN VELLORE HIGH WAY



அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மருத்துவர் பெனடிக்ட் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தன. படுகாயமடைந்த ஜீலியாவிற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 

இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் தாலுகா காவல் நிலைய அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதே இறப்புக்கு காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக தகவல்கள் கூறுகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்