Skip to main content

வேலூர் மாவட்டம் வழியாக கடத்தப்படும் செம்மரகட்டைகள்- காட்டுக்குள் சிக்கிய கார்

Published on 26/02/2019 | Edited on 26/02/2019

 

ஆந்திரா மாநிலத்தில் இருந்து தற்போது வேலூர் மாவட்டம் வழியாக செம்மரம் கடத்துவது அதிகரித்துள்ளது. வேலூர் காட்பாடி வழியாக அல்லது குடியாத்தம் வழியாக, நாட்றம்பள்ளி வழியாக ஆந்திரா மாநிலத்தில் இருந்து செம்மரங்கள் கார்களில், வேன்களில், லாரிகளில் பெங்களுரூ, கொச்சி போன்ற இடங்களுக்கு கடத்தி சென்று அங்கிருந்து வெளிநாடுகளுக்கு செல்கின்றன என்கின்றனர். அப்படி செல்லும் விவரங்கள் தற்போது காவல்துறைக்கு தெரியவந்து, சோதனை சாவடிகளில் சோதனையை அதிகப்படுத்தி பிடித்துவருகின்றனர். அப்படி இன்று சோதனை நடத்தும் போது ஒரு கார் காட்டுக்குள் தப்பி சென்றும் தப்ப முடியாமல் சிக்கியது.

 

te

 

வேலூர் மாவட்டம், குடியாத்தம்  அடுத்த  சைனகுண்டா  சோதனை  சாவடி அருகே  வன  அதிகாரிகள் நான்கு சக்கர வாகனங்களை சோதனை செய்துக்கொண்டு இருந்தனர். அப்போது, காலை 7 மணியளவில் சோதனை நடப்பதை தூரத்திலேயே கண்ட ஒருக்கார் சடாரென பிரேக் போட்டு நின்று திரும்பி சென்றது.

 

இதில் சந்தேகமான வனத்துறை ஊழியர்கள், அதிகாரிகள் அந்த வாகனத்தை துரத்தினர். அந்த கார், காட்டு பாதையில் சென்றது. இவர்களும் விடாமல் துரத்த ஒருயிடத்தில் கார் மட்டும் நின்றுக்கொண்டுயிருந்தது. காரில் யாரும்மில்லை. வனத்துறையினர் அருகே சென்று காரை சோதனை செய்தபோது, ஆந்திர  பதிவெண்  கொண்ட  அந்த காருக்குள் 7 அடி  உயரம்  கொண்ட  8 செம்மரங்கள் இருந்தது. 

 

சோதனையில் எங்கே சிக்கிவிடுவோம்மோ என பயந்துக்கொண்டு காரை ஓட்டிவந்த ஓட்டுநர் காரை நிறுத்திவிட்டு தலைமறைவாகியிருப்பார் என்பதை உணர்ந்தனர். காருக்குள் இருந்த 8 செம்மரங்களையும்  கைப்பற்றினர் , இதன் மதிப்பு  5 இலட்சம்  என  மதிப்பீடு  செய்யப்பட்டுள்ளது. செம்மரக்கட்டைகள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர். காரின் பதிவெண்ணை கொண்டு கார் யாருடையது என விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

சார்ந்த செய்திகள்