Skip to main content

உதயநிதி மட்டும் கைது ஏன்?-டி.ஜி.பி அலுவகலத்தில் டி.ஆர்.பாலு புகார் (படங்கள்)   

Published on 22/11/2020 | Edited on 22/11/2020

 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் அதற்கான முன்னெடுப்புகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதேபோல் திமுகவும் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ள நிலையில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தை முன்னாள் திமுக தலைவர் கலைஞரின் பிறந்த ஊரான திருக்குவளையில் இருந்து துவங்க திட்டமிட்டு சென்றிருந்தார். ஆனால் விதியை மீறியதாக அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதுகுறித்து திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, எம்.பி. வில்சன் ஆகியோர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து டி.ஜி.பி திரிபாதியிடம் புகார் தந்தனர். அப்பொழுது செய்தியாளர்களிடம்  பேசிய டி.ஆர்.பாலு,  மற்றவர்களை கைது செய்தால் மாலை 4 மணிக்கு விட்டுவிடுகிறார்கள். ஆனால் உதயநிதி ஸ்டாலினை பல மணி நேரம் காக்க வைத்து விடுதலை செய்கிறார்கள். கைது என்பதும், போராட்டம், சிறை, சித்திரவதை என்பதும் நாங்களெல்லாம் பார்த்த ஒன்றுதான். நேற்று அதிமுக நடத்திய அரசு விழாவில் விதி பின்பற்றப்பட்டதா? அராஜக ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. இதற்கு டிஜிபி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

சார்ந்த செய்திகள்