Skip to main content

''எய்ம்ஸ் கட்ட வைத்திருந்த ஒரு கல்லையும் திருடிக் கொண்டு போயிட்டாங்க''-எச்.ராஜா பேச்சு! 

Published on 22/09/2022 | Edited on 22/09/2022

 

nn

 

எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட வைக்கப்பட்டிருந்த செங்கலை திருடி சென்று விட்டதாக பாஜக பிரமுகர் எச்.ராஜா பேசியுள்ளார்.

 

சிவகங்கையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பாஜக பிரமுகர் எச்.ராஜா, ''தமிழ்நாட்டுக்கும் போதாத காலம், எனக்கும் போதாத காலம். தமிழகம் இப்பொழுது திவாலாகிப் போன ஒரு மாநிலம். எல்லா திட்டங்களும் மத்திய அரசாங்கத்தின் திட்டங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மீதி ஏதாவது செயல்பாட்டில் இங்கு இருக்கா என்று கேட்டால் எய்ம்ஸ்ஸில் இருந்த ஒரு கல்லை கூட திருடிக் கொண்டு சென்று விட்டார்கள். விரைவிலேயே எய்ம்ஸ் கட்டி முடிக்கப்பட இருக்கிறது. நூறு பேர் ஸ்டூடண்ட் எண்ணிக்கை தற்போது 250 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

 

இப்படி நான் பொருளாதாரம் பேசினால் என்னை என்ன நினைப்பீர்கள். தமிழகத்தில் இந்து பற்றி சர்ச்சையான ஒரு விஷயம் ஓடிக்கொண்டிருக்கிறது. அதைப்பற்றி எச்.ராஜா பேசவில்லையே என்று நினைப்பீர்கள். ஸ்டாலின் ஆட்சியைக் கவிழ்ப்பது, இல்லை திமுகவை உடைக்க வேண்டும், திமுகவை ஒழிக்க வேண்டும் என்று குறிக்கோளோடு ஆண்டிமுத்து ராசா செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். தமிழக மக்கள் செயல்படாத திமுக மீது கோபத்தில் இருக்கிறார்கள். ஏனென்றால் 15,000 கோடி ரூபாய் மின் கட்டணம் மட்டும் உயர்த்தப்பட்டிருக்கிறது. அதே மாதிரி வீட்டு வரி ஒன்றரை மடங்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. அதேபோல பால் பொருட்கள் தயிர், மோர் என எல்லாவற்றின் விலையும் கூட்டப்பட்டு இருக்கிறது. அதிலும் நாசர் சொல்கிறார் நாம் வாங்கி குடிக்கும் பால் எல்லாம் இனி ஹலால் பாலாக இருக்குமாம். ஹலால் முத்திரை அந்த பாலில் இருக்குமானால் ஆவினை நிராகரிப்போம் என இங்கே கேட்டுக்கொள்கிறேன்''என ஆவேசமாக பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்