Skip to main content

கொலை நகரமாகி வரும் கோயில் நகரம்!

Published on 16/06/2018 | Edited on 16/06/2018
kum

 

கோயில் நகரமான கும்பகோணம் கொலை நகரமாக மாறிவருவதை கண்டு பொதுமக்களும் பக்தர்களும் வேதனையடைய துவங்கியுள்ளனர்.

கும்பகோணம் பகுதியில் வட்டிக்குப்பணம் வாங்கிய பிரச்சினையால் கொலை, முன்பகையால் கொலை, கட்டப்பஞ்சாயத்தால் கொலை என பதிலுக்கு பதில் கொலைகள் அறங்கேறிவருகிறது.

 

அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மோரிவாய்க்கால் தெருவை சேர்ந்த பாஸ்கர்.  வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு பின்னர் சொந்த ஊரிலேயே வாழ்ந்து வந்தார். இவருக்கு சதிஷ், வினோத் என இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்தமகன் சுள்ளான் என்கிற சதிஷ் பல்வேறு கொலை வழக்கில் தொடர்புடைய நிலையில் கும்பகோணம் நீதிமன்றத்திலும், காவல்நிலையத்திலும் ஆஜராகி வந்தார். 

 

 ரவுடி சதிஷும், அவரது தம்பி வினோத்தும் கும்பகோணம் பகுதியில் வட்டிக்கு பணம் கொடுத்து வாங்குவதும், பணத்திற்கு பதில் சொத்துக்களை கைப்பற்றுவதும் வாடிக்கையாக வைத்திருந்தனர்.

 

இந்நிலையில் கடந்த வருடம்  கும்பகோணம் மழவராயன் என்பவரது பேரன் விக்ரம் என்பவருக்கு  பணம் கொடுக்கும் விஷயத்தில் சுள்ளானுக்கும் விகரமுக்கும்  ஏற்பட்ட வாய்தகராறு கைலப்பாக மாறியது. 

 

இதில் ஆத்திரமடைந்த சுள்ளான் சதிஷ், அவரது சகோதரர் வினோத் இருவரும் சேர்ந்து டாக்டர் பெசன் ரோடு பகுதியில் கடந்த வருடம் இதே மாதத்தில் விக்ரமையும்  பாரதி என்பவனையும் ஆயுதங்களால் தாக்கி கொலை செய்கின்றனர். இதில் விக்ரம் சம்பவ இடத்திலையே உயிர் இழக்கிறார். பாரதிக்கு முதுகுபுறத்தில் வெட்டியதால் அவர் சிகிச்சை பெற்று உயிருடன் உள்ளார். 

 

கிழக்கு காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து  நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. 

 விக்ரமனின் உறவினர்களும், கூட்டாளிகளும் சுள்ளான் சதீசையும்  அவரது சகோதரன் வினோத்தையும்  தீர்த்து கட்டவேண்டும் என திட்டம் தீட்டி வந்தனர்..

இந்நிலையில் ஏற்கனவே உள்ள கொலை வழக்கிற்காக  கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்து போட்டுவிட்டு  திருநாகேஸ்வரத்திலுள்ள அவரது உறவினர்  வீட்டில் தங்கியவனுக்கு  ஒரு போன் வந்ததையடுத்து இருசக்கர வாகனத்தில் சிறுபையனை அழைத்து கொண்டு கும்பகோணம் நோக்கி   சென்றுள்ளான். அப்போது சீனிவாசநல்லூர் பகுதியில்  காரில் பின் தொடர்ந்து வந்த மர்மநபர்கள் இருசக்கரவாகனத்தை மோதி விபத்து ஏற்படுத்தி சுள்ளானை நிலைதடுமாற வைத்து . பயங்கர ஆயுதங்களை கொண்டு சரமாரியாக தலை மற்றும் கால் பகுதியில் வெட்டி விட்டு காரில் தப்பி சென்றுள்ளனர்.

 

அவர்களின்  கார் பஞ்சர் ஆனாதால் காரை அங்கே விட்டுவிட்டு தப்பி சென்றனர். இதில் சுள்ளான் சம்பவ இடத்திலையே பரிதாபமாக உயிரிழந்தார். சுள்ளான் கூட இருசக்கர வாகனத்தில் வந்த பையன் சிறுகாயங்களுடன் உயிர் தப்பினர். 

 

இச்சம்பவம் குறித்து திருநீலக்குடி போலீசார் சம்பவ இடத்திற்க்கு வந்து பிரேதத்தை கைப்பற்றி அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மர்மநபர்கள் வந்த கார் மற்றும் அரிவாளை கைபற்றி காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்.

கொலை செய்தவர்களை கும்பகோணம் போலீசார் தனிப்படை காவல்துறை அமைத்து  தேடிவருகின்றனர். இந்த கொலை வழக்கில் பாரதி, பெட்ரோல் மணி, பானை பரத், சிசு என்கிற பிரபுராஜ் உள்ளிட்ட 6  பேரும் தலைமறைவாகி உள்ளதால் அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இவர்களில் ஆறு பேர் விக்ரமனின் நண்பர்கள் என்பதும் தெரியவருகிறது.

அமைதியான கோயில் நகரம் தொடர்ந்து கொலை நகரமாக மாறி வருவது பொதுமக்களை அசத்தில் ஆழ்த்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்