Skip to main content

சாலை அமைக்கும் பணியில் லாரி கவிழ்ந்து டிரைவர் பலி 

Published on 03/07/2020 | Edited on 03/07/2020
Thanjavur to Vikravandi road work

 

 

புதிதாக அமைக்கப்பட்டு வரும் விக்ரவாண்டி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலைப் பணிக்கான மண் நிரவலின் போது லாரி பள்ளத்தில் கவிழ்ந்து ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை உண்டாக்கியிருக்கிறது.

 

விக்ரவாண்டிக்கும் தஞ்சாவூருக்கும் இடையே தேசிய நெடுஞ்சாலை பணிகள் கடந்த இரண்டாண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. அந்தப் பணியின் ஒரு பகுதியாக பாபநாசம் அருகே மேலசெம்மங்குடி என்கிற இடத்தில் சாலை ஓரத்தில் மண் நிரப்பப்பட்டு வருகிறது. அதற்காக தஞ்சாவூர் அடுத்துள்ள பிள்ளையார்பட்டி என்கிற இடத்திலிருந்து லாரிகள் மூலம் மண் ஏற்றிக்கொண்டு வந்து பள்ளங்கள் நிரப்பப்படுகிறது. 

 

இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரை எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த தமிழ்வல்லாளன் (46) என்பவர் லாரியில் மண் ஏற்றி வந்தார். அவரது உறவினர் அருண்குமார் (23) என்பவர் கிளினராகவும் வந்துள்ளார். லாரியில் ஏற்றப்பட்ட மண்னை மேலசெம்மங்குடி பகுதியில் நடைபெறும் சாலை பணியில் ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கொண்டிக் கொண்டிருந்தனர். அந்த இடத்தில் இரண்டு நாட்களாக பெய்த மழை தேங்கி மண் பலமிழந்திருந்தது. அந்த இடத்தில் மண் கொட்டிக் கொண்டிய நிலையில் லாரி திடீரென  தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் டிரைவாராக இருந்த தமிழ்வல்லாளன் வெளியே வரமுடியாமல் மாட்டிக்கொண்டு அதே இடத்தில் உயிரிழந்தார். கிளீனர் அருண்குமார் உயிர் தப்பினார்.  

 

பாபநாசம் தீயணைப்பு வீரர்கள் வந்து லாரியில் சிக்கி கொண்டு உயிரிழந்த தமிழ் வல்லாளன் உடலை மீட்டனர். பின்னர் கிரேன் இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு லாரியை மேல எடுத்தனர். 

 

இச்சம்பவம் குறித்து மெலட்டூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த தமிழ்வல்லாளனுக்கு மனைவி ஒரு மகன், மகள் உள்ளனர் என்பது குறிப்பிட தக்கது.

 

 


 

சார்ந்த செய்திகள்