Skip to main content

படம் ரிலீசாகி வெற்றி பெறுவதற்கே நடிகர் ரஜினி அரசியலுக்கு வருகிறார்!" - அமைச்சர் கருப்பணன் விமர்சனம்!

Published on 19/10/2020 | Edited on 19/10/2020

 

பரக

 

நடிகர் ரஜினிகாந்த், தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று சில ஆண்டுகளுக்கு முன்பு உறுதி பட தெரிவித்திருந்தார். அதிலிருந்து அவருடைய அரசியல் வருகை தொடர்பான கருத்துகள் தொலைக்காட்சிகளில் அடிக்கடி விவாதப்பொருளாக இருந்துவருகின்றது. ரஜினியின் நலம் விரும்பிகள் ஒவ்வொரு மாதத்தின் பெயரைச் சொல்லி, இந்த மாதத்தில் ரஜினி கட்சியை ஆரம்பிப்பார் என்று தொடர்ந்து கூறி வருகிறார்கள்.

 

ரஜினியின் வருகையை பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் வரவேற்றாலும், அ.தி.மு.க உள்ளிட்ட சில கட்சிகள் தொடர்ந்து எதிர்த்து வருகிறார்கள். இதுதொடர்பான கேள்விகளுக்கு அமைச்சர் ஜெயக்குமார், செல்லூர் ராஜூ போன்றவர்கள் தொடர்ந்து பதிலளித்து வருகிறார்கள். இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவது தொடர்பாக அமைச்சர் கருப்பணன் காட்டமான கருத்துகளை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், "படம் ரிலீசாகி வெற்றி பெறுவதற்கே ரஜினி அரசியலுக்கு வருவதாகவும், இனி நடிகர்கள் முதல்வர் ஆக முடியாது என்றும், விவசாயிதான் தமிழக முதல்வர் ஆக முடியும்" என்று தெரிவித்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்