Skip to main content

நாகை - காங்கேசன் இடையே பயணிகள் கப்பல் சேவை

Published on 20/09/2023 | Edited on 20/09/2023

 

Passenger ferry service between Nagai to Kangeson

 

நாகப்பட்டினம் சிறு துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்க உள்ளது.

 

நாகப்பட்டினம் சிறு துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பலை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகளை தமிழக பொதுப்பணிகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று ஆய்வு செய்தார். 150 பயணிகள் பயணம் செய்யும் வகையில் விரைவு பயணியர் கப்பல் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கப்பல் இயக்கும் நடவடிக்கைகளை தமிழ்நாடு கடல்சார் வாரியம், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய கப்பல் போக்குவரத்துக் கழகம் இந்த கப்பல் போத்துகுவரத்தை துவங்க நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளது.

 

மத்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து துறை, மற்றும் வெளியுறவுத்துறை மூலம் கப்பல் போக்குவரத்தை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்குவதற்காக நாகப்பட்டினம் துறைமுக கால்வாய் தூர்வாருதல், பயணிகள் முனையம் அமைப்பது போன்ற பணிகள் முடக்கி விடப்பட்டுள்ளன.

 

இந்த கப்பல் போக்குவரத்து சேவை வெளிநாடு செல்லும் கப்பல் பயணம் என்பதால், மத்திய அரசின் தொழில்துறை, பாதுகாப்பு துறை மற்றும் சிஐஎஸ்எஃப் மூலம் கையாள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசுடன் இணைந்து பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்க மத்திய அரசு உத்தேசித்துள்ளது. மேலும் நாகை துறைமுகத்தில் பயணிகளுக்காக அனைத்து வசதிகளும் உள்ள கப்பல் முனையம் அமைக்கப்பட உள்ளது. இந்த கப்பல் போக்குவரத்து சேவை அக்டோபர் முதல் வாரத்தில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

 

சார்ந்த செய்திகள்