Skip to main content

"என் வாழ்வின் மறக்க முடியாத திட்டம் இது.." - முதல்வர் உருக்கம்

Published on 20/01/2022 | Edited on 20/01/2022

 

ரகத

 

தர்மபுரியில் ரூ.35 கோடி மதிப்பிலான பல்வேறு தி்டங்களுக்குத் தமிழக முதல்வர் காணொளிக் காட்சி வாயிலாக இன்று அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், "ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் தலைவர் கலைஞர் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. இதற்காக நான் எவ்வளவு முயற்சி செய்தேன் என்று உங்கள் அனைவருக்கும் தெரியும். என் வாழ்க்கையில் மிக முக்கியமான திட்டம் என்று வரிசையாக வகைப்படுத்தப்பட்டால் அதில் நிச்சயம் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் இடம்பெறும். 

 

அந்த அளவுக்கு இந்தத் திட்டம் மிக முக்கிய ஒன்றாக இருக்கிறது. இந்தத் திட்டம் நிச்சயம் பெரிய அளவில் விரிவுபடுத்தப்படும். தற்போது கரோனா தொற்று காரணமாக தருமபுரிக்கு நேரில் வந்து நலத்திட்ட உதவிகளை என்னால் துவங்கி வைக்க முடியவில்லை. இருந்தாலும் விரைவில் தொற்று குறைந்தவுடன் தருமபுரிக்கு நான் நேரில் வருவேன். மேலும், சேலம் தருமபுரி இடையே 250 கோடி சாலை விரைவில் அமைக்கப்பட உள்ளது. தருமபுரியில் புதிய சிப்காட் பூங்கா அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 4,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் விரிவுபடுத்தப்படும். மாவட்டத்தின் முக்கிய தேவைகள் அனைத்தும் விரைந்து நிறைவேற்றப்படும்" என்று தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்