Skip to main content

சென்னை உயர்நீதிமன்றத்தில் மகாத்மா நினைவு தினம் அனுசரிப்பு! 

Published on 30/01/2020 | Edited on 30/01/2020

சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளாரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. 
 

இந்திய நாட்டின் விடுதலைக்காக அயராது பாடுபட்டு, தங்களது இன்னுயிரை நீத்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், அவர்களது தியாகத்தை நினைவுப்படுத்தும் விதமாகவும்,  தேசத்தந்தை மகாத்மா காந்தியாரின் நினைவு நாள் (ஜனவரி- 30) தியாகிகள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. 

mahatma gandhi death anniversary chennai high court

இதனையொட்டி, சென்னை உயர்நீதிமன்றத்தில் காலை 11.00 மணி முதல் 11.02 மணி வரை இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி அனுசரிக்கப்பட்டது. அந்நேரத்தில், வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்த நீதிபதிகள், வழக்காடிய வழக்கறிஞர்கள், விசாரணைக்கு வந்திருந்த வழக்காடிகள், காவல்துறையினர், நீதிமன்ற செய்தியாளர்கள், சி.ஆர்.பி.எப். வீரர்கள், நீதிமன்ற ஊழியர்கள் என அனைவரும் எழுந்து நின்று இரண்டு நிமிடம் கண்களை மூடி மவுன அஞ்சலி செலுத்தினர். 

 

சார்ந்த செய்திகள்