Skip to main content

தாமதமான காலை உணவு... பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்!

Published on 16/09/2022 | Edited on 16/09/2022

 

 Late breakfast... school principal suspended!

 

தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க பள்ளிகளில் மாணவ - மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து நேற்று முதல் இந்தத் திட்டம் செயல்பட துவங்கியுள்ளது.  இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின், மதுரை கீழ அண்ணாதோப்பில் உள்ள ஆதிமூலம் மாநகராட்சி பள்ளியில் நேற்று தொடங்கி வைத்தார்.

 

இந்நிலையில் காலை உணவு திட்டத்தில் கால நேரத்தை மீறி தாமதமாக காலை உணவு வழங்கிய புகாரில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் திருவிழந்தூர் நகராட்சி தொடக்க பள்ளியில் காலை உணவை மாணவர்களுக்கு நேரம் தாண்டி காலை 9.45 மணிக்கு வழங்கியதாக புகார் எழுந்த நிலையில், அந்த தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் குருபிரபா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவத்தில் மயிலாடுதுறை நகராட்சி ஆணையர், மாவட்ட கல்வி அலுவலர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்