Skip to main content

அரசியலுக்கு வருவேனா, இல்லையா என்பது பற்றி ஆலோசிக்க உள்ளேன் - நடிகர் ரஜினிகாந்த்!

Published on 12/07/2021 | Edited on 12/07/2021

 

jk

 

சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மக்கள் மன்ற நிர்வாகிகளை நடிகர் ரஜினிகாந்த் இன்று (12.07.2021) சந்தித்துப் பேச உள்ளதாக சில தினங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இந்நிலையில், இன்று காலை முதலே கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினி ரசிகர்களும், நிர்வாகிகளும் குவிந்துவருகிறார்கள். இதில் அரசியல் பற்றி ரஜினி பேசுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் வீட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், "இந்தக் கூட்டத்தில் அரசியலுக்கு வருவேனா, இல்லையா என்பது  பற்றி ஆலோசிக்க உள்ளேன்" என்று தெரிவித்துள்ளார். இதனால் ரஜினி அரசியல் பிரவேசம் தொடர்பாக மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்