Skip to main content

“எப்படி இருக்கீங்க செந்தில் பாலாஜி?” - கேள்விகளை அடுக்கிய நீதிபதி

Published on 28/06/2023 | Edited on 28/06/2023

 

 'How are you?'-the judge asked

 

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார். அதேசமயம் அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக அவர் முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பிறகு நீதிமன்றத்தின் அனுமதியோடு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவக்குழு கண்காணிப்பில் உள்ளார்.

 

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு பின்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செந்தில் பாலாஜிக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்றுடன் 14 நாட்கள் நீதிமன்றக் காவல் முடிவடைந்த நிலையில் இன்று மருத்துவமனையில் இருந்தபடியே செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு காணொளியில் ஆஜரானர்.

 

அவரிடம் உடல்நிலை குறித்து கேட்டறிந்த நீதிபதி அல்லி,  உங்கள் உடல்நலம் எப்படி இருக்கிறது? எப்படி இருக்கிறீர்கள்? போதுமான சிகிச்சைகள் வழங்கப்படுகிறதா? காவல்துறை பாதுகாப்பு போதுமானதாக இருக்கிறதா? என கேள்விகளை எழுப்பிய நிலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட தனக்கு வலி இருப்பதாக செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து விசாரித்த நீதிபதி செந்தில் பாலாஜிக்கு ஜூலை 12 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.

 

நேற்றுவரை திரவ உணவு மட்டுமே எடுத்துக்கொண்ட செந்தில் பாலாஜி, இன்றுதான் திட உணவு எடுத்துக்கொள்ளும் நிலைக்கு வந்திருப்பதாகவும், தன்னிச்சையாக எழுந்து நடக்க முடியாத நிலையே தொடர்வதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்