Skip to main content

ஊர் காவல் படை பெண் காவலருக்கு கத்திக் குத்து; சேலத்தில் பரபரப்பு

Published on 22/03/2023 | Edited on 22/03/2023

 

nn

 

சேலம் பழைய பேருந்து நிலையத்தில் பட்டப் பகலில் ஊர் காவல் படையைச் சேர்ந்த பெண் காவலருக்கு கத்திக் குத்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

அயோத்தியாபட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சலி தேவி. இவர் ஊர் காவல் படையில் பெண் காவலராகப் பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் இன்று சேலம் பேருந்து நிலையத்தில் பணி முடிந்து வந்துகொண்டிருந்த போது, சதீஸ்குமார் என்ற நபர் அஞ்சலி தேவியை கத்தியால் குத்திவிட்டுத் தப்பியுள்ளார். காயங்களுடன் மீட்கப்பட்ட அஞ்சலி தேவி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

 

சிகிச்சை பெற்றுவரும் அஞ்சலிதேவி கொடுத்த வாக்குமூலத்தில் ''ரேஷன் கடையில் வேலை வாங்கித் தருவதாக என்னிடம் பணம் வாங்கினான். திரும்ப பணம் வேண்டும் எனக் கேட்டு அவன் மேல் கேஸ் கொடுத்தேன். இதனால் ஆத்திரத்தில் பழைய பேருந்து நிலையத்திலிருந்து வேலை முடித்துவிட்டு வரும் பொழுது கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சி செய்தான்'' எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கிச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமாரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்