Skip to main content

கோவை, தஞ்சையில் 2 சதவிகிதத்திற்கு மேல் தொற்று-தமிழகத்தின் இன்றைய கரோனா நிலவரம்! 

Published on 05/09/2021 | Edited on 05/09/2021

 

High incidence in Coimbatore and Tanjore districts - Corona situation in Tamil Nadu today!

 

தமிழகத்தில் இன்று ஒருநாள் கரோனா பாதிப்பு என்பது   1,575  லிருந்து குறைந்து 1,592 ஆகப் பதிவாகியுள்ளது. இது நேற்றைய எண்ணிக்கையை விட சற்று அதிகமாகும். இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,62,119 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் இன்று 165 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. நேற்று சென்னையில் கரோனா ஒருநாள் பாதிப்பு என்பது 167 என்று இருந்த நிலையில், இன்று குறைந்துள்ளது.

 

இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் ஒரேநாளில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 35,018 ஆக அதிகரித்துள்ளது. இதில் அரசு மருத்துவமனையில் 11 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 7 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 16,282 ஆக உள்ளது. இன்று ஒரே நாளில் 1,607 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 25,71,378 பேர் மொத்தமாகக் குணமடைந்துள்ளனர். இணை நோய்கள் ஏதும் இல்லாத 5 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். கோவை-229, ஈரோடு-104, செங்கல்பட்டு-127, திருவள்ளூர்-84, தஞ்சை-70, நாமக்கல்-62, சேலம்-58, திருச்சி-56, திருப்பூர்-87 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை, தஞ்சை மாவட்டங்களில் 2 சதவீதத்திற்கு மேல் தொடர்ந்து தொற்று பதிவாகி வருகிறது. 

 

தமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை சற்று அதிகரித்திருக்கும் நிலையில் அண்டை மாநிலமான கேரளாவில் கடந்த சில நாட்களாகவே தினசரி கரோனா பாதிப்பு 30 ஆயிரத்தைக் கடந்து வந்தது. இந்நிலையில் இன்று தினசரி கரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கேரளாவில்  26,701 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. கேரளாவில் இன்று ஒரே நாளில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 74 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்