Skip to main content

'இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி' - சென்னை காவல்துறை எச்சரிக்கை

Published on 07/11/2023 | Edited on 07/11/2023

 

n

 

வரும் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை என்பதால் பொது இடங்கள் மற்றும் கடைத் தெருக்களில் மக்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. இந்நிலையில் தீபாவளி கொண்டாட்டம் மற்றும் பட்டாசு விற்பனை தொடர்பான கட்டுப்பாடு விதிமுறைகளைச் சென்னை காவல்துறை வெளியிட்டுள்ளது.

 

தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 வரை என மொத்தமாக 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்; உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பட்டாசு வெடிக்கும் நேரம் குறித்த விதிமுறையை மக்கள் பின்பற்ற வேண்டும்; தீபாவளி பண்டிகையின் போது சீன பட்டாசுகளை வெடிக்க வேண்டாம்; பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடிப்பதற்கான விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்; பட்டாசுகளால் விபத்து நேர்ந்தால் 100, 101, 108, 112 ஆகிய எண்களை உடனே அழைக்க வேண்டும்; சூழலுக்கு உகந்த பசுமை பட்டாசுகள் மட்டுமே விற்கப்பட வேண்டும், வெடிக்கப்பட வேண்டும்; தடை செய்யப்பட்ட சீன தயாரிப்பு வெடிகளை விற்பதோ/வெடிப்பதோ கூடாது; பட்டாசுகளை கொளுத்தி தூக்கி எறிந்து விளையாடுவதை பொதுமக்கள் முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்; பெரியவர்களின் பாதுகாப்பு இல்லாமல் குழந்தைகளிடம் தனியாக பட்டாசு வெடிகளை கொடுத்து வெடிக்க அனுமதிக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சென்னையில் மட்டும் தீபாவளியன்று சுமார் 18,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்