Skip to main content

புதிய மின் மசோதாவை கைவிடக்கோரி விவசாயிகள் கையெழுத்து இயக்கம் 

Published on 01/07/2020 | Edited on 01/07/2020
Farmers' signature movement to abandon new electricity bill

 

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த பரவளூர் கிராமத்தில் அனைத்து விவசாய சங்க கூட்டமைப்பு மற்றும் இலவச மின்சார உரிமை காப்பதற்கான விவசாயிகள் கூட்டியக்கம் சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.

மணிமுத்தாறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தங்க.தனவேல் தலைமையில் தமிழக விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.திருநாவுக்கரசு, உழவர் மன்றங்களின் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் கார்மாங்குடி வெங்கடேசன், முன்னோடி விவசாயிகள் இராமச்சந்திரன், பாலகிருஷ்ணன், குப்புசாமி, வெங்கடேசன் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு விவசாய நிலத்தில் நின்றுகொண்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திபோது, மத்திய அரசு மின்சார சட்டத் திருத்த மசோதா-2020ஐ உடனே கைவிட வேண்டும், மின்சாரத்தை பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்,  விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்வதற்கு மத்திய அரசு சட்ட பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும், அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம் உள்ளிட்ட  3 அவசர சட்டங்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கையெழுத்து இயக்கத்தை தொடங்கினார்.

பின்னர் விவசாயிகளை வஞ்சிப்பதாக, மாநில அரசுகளை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

சார்ந்த செய்திகள்